யாழ்ப்பாணம், சுளிபுரத்தைச் சேர்ந்த 6 வயது சிறுமி றெஜினாவுக்கு உரிய நீதிபெற்றுத் தரக்கோரி இன்று காலை யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டத்திலீடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஏற்பாடு செய்திருந்தது.

யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் ஆரம்பமான குறித்த ஆர்ப்பாட்டப் பேரணி சேர் பொன். இராமநாதன் வீதியூடாக சென்று யாழ்ப்பாணம் - பலாலி பிரதான வீதியை சென்றடைந்து குறித்த வீதியை மறித்து முற்றுகைப் போராட்டத்தை ஆர்ப்பாட்டத்திலீடுபட்ட மாணவர்கள் முன்னெடுத்தனர்.

இதன்போது 6 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோத்திற்குட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் உடனடியாக உரிய தரப்பினர் நீதியை பெற்றுக்கொடுக்க வேண்டுமென்று ஆர்ப்பாட்டத்திலீடுபட்ட மாணவர்கள் வலியுறுத்தினர்.

கடந்த திங்கட்கிழமை மாலை யாழ்ப்பாணம் சுளிபுரத்தைச் சேர்ந்த றெஜினா என்ற 6 வயதுடைய பாடசாலை மாணவியொருவர் பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட நிலையில் கொலைசெய்யப்பட்ட நிலையில் சடலமாக கிணற்றிலிருந்து மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

லேதிக செய்திகளுக்கு 

                                        யாழில் சிறுமி காயங்களுடன் கிணற்றில் இருந்து சடலமாக மீட்பு

                                       6 வயது பிஞ்சு மழலை கொலை : சந்தேக நபரின் பரபரப்பு வாக்கு மூலம்

                                       சிறுமி கொலை விவகாரம்; விளக்கமறியல் நீடிப்பு