(  எம். எம். சில்வெஸ்டர் )

டி.எஸ். ஐ. கிண்ண பாடசாலை கரப்பந்தாட்டடத்தின் தேசிய மட்ட போட்டிகள் ஜூலை மாதம் 14 ஆம் திகதியன்று ஆரம்பமாகவுள்ளது.

இந்த தேசிய மட்ட கரப்பாந்தாட்டப் போட்டிகள் மாதம்பை சேனாநாயக்க மத்திய வித்தியாலய மைதானத்தில் ஜூலை மாதம் 14, 15,16, 21,22,23,24 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளன.

நாட்டின் 25 மாவட்டங்களிலிருந்தும் முதலிடம் மற்றும் இரண்டாம் இடம் பிடித்த  ஐந்து வகையான வயதுப் பிரிவுகளின் கீழ் ஆண் , பெண் என இருபாலாரிலும் மொத்தமாக 500 அணிகள் பங்கேற்கவுள்ளன.

11 வயதின் கீழ் மற்றும் 13 வயதின் கீழ் பிரிவுகளின் ஆண், பெண் இருபாலாருக்குமான தேசிய மட்டப் போட்டிகள் 14,15,16 ஆம் திகதிகளிலும், 15 வயதின் கீழ் , 17 வயதின் கீழ் மற்றும் 19 வயதின் கீழ் ஆகிய பிரிவுகளுக்கான ஆண், பெண் இருபாலாருக்குமான போட்டிகள் 21,22,23,24 ஆம் திகதிகளிலும் நடைபெறவுள்ளன.

இதன் இறுதிப் போட்டிகள் அகஸ்ட் மாதம் 3 ஆம், 4 ஆம் திகதிகளில் மஹரகமை இளைஞர் சேவை உள்ளரங்க மைதானத்தில் நடடத்த திட்டமிடப்பட்டுள்ளது.