இலங்கை சுற்றுலா துறையினால் மேற்கொள்ளப்படும் பல்துறை பிரச்சார நடவடிக்கைகள்

Published By: Priyatharshan

28 Jun, 2018 | 12:45 PM
image

பிரசார நடவடிக்கைகள் இறுதி கட்ட மதிப்பாய்வு விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், இலங்கை சுற்றுலாத்துறை முனைப்புடன் பல் தள பிரச்சார ஊக்குவிப்பு பணிகளை எதிர்வரும் ஓகஸ்ட் 2018 ஆரம்பிக்கப்படவுள்ளது.

பல்தள பிரசார நடவடிக்கைகள் முக்கியமாக ஐரோப்பா, மத்திய கிழக்கு, அவுஸ்திரேலியா, சீனா மற்றும் இந்தியா உட்பட சர்வதேச சந்தையினை குறிவைத்து செயல்படுகிறது. சுற்றுலா துறையில், இலங்கையின் அதி உயர் உருவமைப்பை உலகத்திற்கு எடுத்து இயம்பும் வகையில் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி பணியகம் (SLTPB) 3 மாத கால CNN விளம்பர பிரச்சார நடவடிக்கைகள் முன்னேற்றத்தை நோக்கி பயணிக்கின்றது. 

இதன் மூலம் உலகளாவிய ரீதியாக இலங்கையின் அதிஉயர் சுற்றுலாத்துறையின் தன்மையை சித்தரிக்கும் விளம்பர பிரசாரங்கள் தற்போது நடைபெற்று வருகின்றது.

கடந்த 12 மாத காலப்பகுதியினில், இலங்கை சுற்றுலா அதன் வெற்றிகரமான சர்வதேச ஊடக வலைப்பதிவர் பயண திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. 2017ஆம் ஆண்டு மே மாதம் முதல் 2018 ஏப்பிரல் மாத வரையிலான காலப்பகுதியினில், உலகளாவிய ரீதியாக 30 செல்வாக்குள்ள சமூக வலை தள எழுத்தாளர்கள் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளனர். 

இதன் காரணமாக 65 மில்லியன் பதிவுகள் பதிவாகியுள்ளன. அதேவேளை, இன்ஸ்ரகிராம், யூரியூப் மற்றும் பேஸ்புக் உட்பட சமூக வலைய தளங்களின் ஊடாக 12.5 மில்லியன் பார்வையாளர்களை சென்றடைந்துள்ளது.

சமூக ஊடகங்களில் அதிநுண்ணுயர் சென்ற வலைப்பதிவு இடுகைகள் 

2017ஆம் ஆண்டில், இலங்கை தொடர்பான பல தொலைக்காட்சி ஆவண படங்கள், பல பிரபலமான தொலைக்காட்சிகள் ஊடாக ஒளிபரப்பப்பட்டன. செனல் 9 (அவுஸ்திரேலியா), WDR (ஜேமனி), 3SAT (பிரான்ஸ்),  CCTV (சீனா) மற்றும் ARTE (பிரான்ஸ், ஜேமனி) உள்ளிட்ட ஊடகங்களினால் ஒளிபரப்பப்பட்டன.

நாட்டில் உள்ள அழகிய தேயிலை தோட்டங்கள், கடற்கரைகள், கலாச்சார பாரம்பரியம் மற்றும் அயற்பண்புடைய வனவிலங்கு போன்றவை காட்சிப்படுத்தப்பட்டன.

இந்த ஆண்டு ஐக்கிய இராட்சியத்தில் உள்ள கொண்டே நாஸ்ட், லக்சரி ட்ரவல் கையிட், டெஸ்ட்டினேஷன் வெடிங், மற்றும் ஹனிமூன் அப்ரோட் மற்றும் லோன்லி பிளனற் இந்தியா போன்ற அமைப்புக்கள் காட்சிப்படுத்தின. 

75 மில்லியன் வாசகர்கள் மற்றும்  பார்வையாளர்கள் (தொலைக்காட்சி மற்றும் சஞ்சிகைகள்) இலங்கை தொடர்பான விடயங்களை பார்வையிட்டுள்ளனர். இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் மற்றும் முதலீட்டாளர்களின் வருகைக்கு முக்கிய சந்தையான ஐக்கிய இராட்சியம், பிரான்ஸ், ஜேமனி, சீனா மற்றும் இந்தியா போன்ற நாடுகளில் இருந்தே அவர்கள் வந்துள்ளனர்.

இது தவிர, ஊக்குவிக்கப்பட்ட ஊடகங்களின் ஊடாக ஊடகங்களினால் மேற்கொள்ளப்பட்ட விளம்பர முயற்சிகள் மூலம் மேற்கொள்ளப்பட்ட விளம்பர நடவடிக்கைகள் காரணமாக இலங்கை குறித்து சிறந்த பிரசாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. குறிப்பாக உணவு மற்றும் பயண சஞ்சிகை, எஸ்கப்பிசம் சஞ்சிகை பிருத்தானியா, அபென்ரீயுவர் மற்றும் ரீயிசன் மற்றும் ரீயிஸ் மற்றும் பிரிஐஸ் ஜேமனி, வொயேஜர்ஸ் மற்றும் கிராண்ட் ரிப்போட்டேஜெஸ் பிரான்ஸ், மற்றும் கல்ப் நியூஸ் பேப்பர் ஐக்கிய அரபு இராட்சியம் போன்ற ஊடகங்கள் இலங்கை குறித்து சிறப்பான தகவல்களை வெளியிட்டுள்ளன. 

2018 ஆம் ஆண்டில் பயண எழுத்தாளர் திட்டத்தின் கீழ் பயண எழுத்தாளர்கள் மூலம் 2 மில்லியன் எண்ணிக்கையான வாசகர்களை சென்றடைந்துள்ளது. அதேசமயம் அமெரிக்க டொலர்கள் 190,000 என்ற தொகை விளம்பர மதிப்பாக குறிப்பிடப்பட்டுள்ளது.

முக்கியமாக விளம்பர நிகழ்வுகளில்,  ITB பேர்லின் 2018, ATM டுபாய் மற்றும் SATTE இந்தியா போன்ற நிகழ்வுகளில் SLTPB ஊடகவியலாளர் மாநாடுகளை நடத்தியது. இந்த மாநாட்டில் 81 ஊடக அமைப்புக்கள் கலந்து கொண்டதுடன்  54 ஊடக கட்டுரை ஆக்கங்கள் வெளியிடப்பட்டன. அதேபோல ITB 2018 நிகழ்வு 80 ஊடக அமைப்புக்களை ஈர்த்ததுடன் 27 ஊடக அறிக்கைகள் வெளியிடப்பட்டன. அத்துடன்  ATM  2018,  35 ஊடக அமைப்புக்களை கவர்ந்ததுடன் 20 ஊடக அறிக்கைகளும் வெளியிடப்பட்டன. இவற்றை வெளிப்படுத்தியதன் மூலம் அமெரிக்க டொலர்கள் 1.4 மில்லியனுக்கும் மேலான பெறுமதியான ஊடக வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன. SLTPB ஒரே நேரத்தில் மேலும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலான வலைப்பின்னலை நடத்தியதன் மூலம்ரூபவ் சிறந்த பலன் கிட்டியுள்ளது.

இதற்கு இடையில், இலங்கை சுற்றுலா அபிவிருத்தி பணியகம், CNN ஊடான விளம்பர பிரசார நடவடிக்கைகள் மூலம், உலகளாவிய ரீதியிலான பிரதான சந்தைகளின் மிக அதிக எண்ணிக்கையிலான பார்வையாளர்களை கவரக்கூடியதாக இருந்தது. CNN இனால் முன்னெடுக்கப்பட்ட 3 மாத கால பிரசார காட்சிப்படுத்தல் மூலம் இலங்கையின் வனஜீவராசி வாழ்க்கை மற்றும் கலாச்சார பாரம்பரியம் என்பனவற்றை கோடிட்டு காட்டியது.

டொலர் 625,000 விளம்பர பிரசாரத்தின் மூலம் தொலைக்காட்சி விளம்பரங்கள்ரூபவ் தலையங்கங்களும் உள்ளடங்கும். இது சமூக ஊடக தளங்களில் ஆசிரியர் தலையங்கத்தின் ஊடாக CNN இன் “கிரேட் பிக் ஸ்ரோரி” மூலம் விரிவாக காட்சிப்படுத்தப்பட்டது. இந்த சர்வதேச ஊடக ஜம்பவான்களின் இணைவாக்கத்தின் ஊடாக மேற்கொள்ளப்படுவது ஒரு இடைக்கால நடவடிக்கையாகும். உலகளாவிய எண்மான பிரசாரங்கள் ஏற்படும் வரை சர்வதேச ரீதியிலான பிரசாரங்கள் நடைபெறும்.

“கிரேட் பிக் ஸ்ரோரி” CNN இன் சமுக ஊடகத்தின் கரமாக திகழ்வதுடன், யூரியூப், பேஸ்புக், இன்ஸ்ரகிராம் மற்றும் டுவிட்டர் போன்ற பல சமூக தளங்களின் ஊடாக வியாபித்துள்ளன. திரைப்பட கதை சொல்வதற்கு முக்கியத்துவம் வழங்கப்படுவதுடன், GBS இலங்கையின் இயற்கை மற்றும் காலாச்சார அதிசயங்கள் குறித்து விபரமாக விளக்கப்படுவதற்கு முக்கியத்துவம் வழங்குவதுடன் அதன் தாற்பரியம் குறித்த சகல விடயங்களும் சித்தரிக்கப்படுகிறன.

ஒவ்வொரு அம்சத்திலும் இலங்கையின் பன்முக தன்மையை காண்பிக்கும் இந்த மூன்று பகுதிகளைக் கொண்ட சிறிய தொடரில்ரூபவ் கிரேட் பிக் ஸ்ரோரி இலங்கையின் 3 முக்கியமான கலாச்சார மற்றும் இயற்கை அம்சங்களைக் கொண்டுள்ளது. சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த தம்புள்ளை குகைக் கோயில் வளாகம், நெருப்பு நடனம், மற்றும் சதுர்ப்பு நிலங்கள் ஆகியன அவற்றில் காண்பிக்கப்பட்டுள்ளன.

தம்புள்ளை தொடர்பான காணொளி ஏற்கனவே ஒளிபரப்பப்பட்டுள்ளது. ஏனைய இரண்டு பகுதிகளும் எதிர்வரும் காலத்தில் வெளிப்படுத்தப்படும். 3 மாத காலப்பகுதியினுள் GBS,  800, 000 இற்கும் மேற்பட்ட பார்வையாளர்களை கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கவர்ச்சிகரமான இவற்றை புடம்போட்டு GBS இன் ஊடாக வெளிப்படுத்துவதன் மூலம் SLTPB தனித்துவமான இயற்கை மற்றும் கலாச்சார ஒன்றிணைப்பு என்பனவற்றை குவிமையப்படுத்துவதன் மூலம் இலங்கையினால் வழங்கப்படும் பல்வேறு கலாச்சார வேறுபாடுகளை அனுபவிக்க ஆர்வமுள்ள சுற்றுலாப் பயணிகளின் முக்கியத்துவத்தை குறிப்பாக வெளிப்படுத்துகிறது.

பூகோள ரீதியாக 3 மாத காலப்பகுதியினுள் CNN வலையமைப்பின் ஊடாக 1500 இற்கும் மேற்பட்ட உச்ச மற்றும் சாதாரண நேரங்களில் வர்த்தக குறியீடுகளை ஒளிபரப்புவுதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இலங்கையின் சுற்றுலாவிற்காக வடிவமைக்கப்பட்ட வர்த்தக விளம்பரங்கள் இலங்கையின் இயற்கை காட்சிகள், வனஜீவ வாழ்க்கை மற்றும் பாரம்பரிய கலாச்சார விழுமியங்களை முன்னிலைப்படுத்தும் அடிப்படையிலான உரிய இலக்குடன் அமையும்.

CNN இன் ஆசிரியர் தலையங்கத்தை கொண்டுள்ள 60 செக்கண்ட் விடுமுறை காணொளி மூலம் இலங்கையின் கடற்கரைகள், கடல்சறுக்கல் மற்றும் கொழும்பு நகரை அடிப்படையாக கொண்ட விடயங்கள் முன்னிலைப்படுத்தப்படும். இந்த வர்த்தக நடவடிக்கைகள் விமான நிலைய வலையமைப்புடன் இணைப்பதன் மூலம் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பயணிகளை கவரும் நோக்கில் அமைக்கப்படுகிறது.

“ஜனரஞ்சகமான மற்றும் வெளிப்படுத்தப்படாத இலங்கையில் மறைந்துள்ள கலாச்சார மற்றும் பாரம்பரிய தன்மை போன்றவற்றை வெளிப்படுத்தும் நடவடிக்கைகளை தாம் முனைப்புடன் மேற்கொண்டு வருவதாக” சுற்றுலா அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ சமய விவகாரங்களுக்கான அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவிக்கிறார்.

சர்வதேசத்துடனான சிறந்த தொடர்பின் மூலம் CNN இலங்கை தொடர்பான சிறப்பு பண்பினை வெளிப்படுத்துவதில் சிறந்த அடியினை முன்வைத்துள்ளோம். இந்த கூட்டமையின் மூலம் இலங்கையின் பல்வேறு கலாச்சாரத்தை முன்னிலைப்படுத்த முடிகின்றது. இது தவிர “கிரேட் பிக் பொஸ்” சின் கதைகள் மூலம்ரூபவ் உலகளாவிய ரீதியாகவுள்ள ரசிகர்களை சென்றடைவதற்கான முயற்சியை எதிர்பார்க்கின்றோம் எனவும் அவர் தெரிவித்தார்.”

நாங்கள்,  இலங்கையை ஒரு பிரபலமான சுற்றுலா மற்றும் சுற்றுலா தலம் என்பதனை வெளியுலகத்திற்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் உலக வரைபடத்தில் ஸ்தாபிப்பதற்கு கடும் முனைப்புடன் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றோம். முன்னணி வெளிநாட்டு பயண சஞ்சிகைகளில் 12 சந்தைகளில் விளம்பரம் செய்தள்ளோம். இது தவிர, பிரதான பயண காட்சி நிகழ்வுகளில் குறிப்பாக அண்மையில் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட “மாஸ்டர் காட்” பிரசாரம் மற்றும் CNN உலகளாவிய பிரசார நடவடிக்கைகளும் எம்மால் சிறப்பாக மேற்கொள்ளப்பட்ட செயல்பாடுகள் என இலங்கை சுற்றுலா அபிவிருத்தி பணியகத்தின் நிர்வாக பணிப்பாளர் திரு. சுதேஷ் பாலசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

மேற் கொள்ளப்படும் பிரச்சார நடவடிக்கைகள் குறித்து CNN இன்ரநாஷனலின் விளம்பர மற்றும் விற்பனை குறித்த சர்வதேச சிரேஷ்ட உப தலைவர் சுனித்த ராஜன் கருத்து தெரிவிக்கையில்,

இலங்கை சுற்றுலாத் துறையினருடன் இணைந்து கைகோர்த்து செயல்படுவது மகிழ்ச்சிகரமாகவுள்ளது. இலங்கை பயண அனுபவங்களை பயணிகளுக்கு உரிய முறையில் தெளிவுப்படுத்துவதே எமது தலயாய நோக்கமாக உள்ளது எனவும் தெரிவித்தார். 

எமது முக்கிய குறிகோளாக இலங்கை பயண அனுபவங்களை வாழ்க்கையுடன் இணைப்பதை கருத்தில் கொண்டு செயற்படுகிறோம். CNN மற்றும் கிரேட் பிக் ஸ்டோரி என்பன புத்திசாலித்தனமாக இலக்குடன் அதனை செயற்படுத்தும் திட்டத்தில் வெற்றிக் கண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமது குழுமத்தின் புதிய இலச்சினையை வெளியிட்ட...

2024-04-10 22:13:17
news-image

கொழும்பிற்கும் பங்களாதேஷின் டாக்காவுக்கு இடையில் நேரடி...

2024-04-09 15:30:03
news-image

வெற்றிக்கு மீள்வரைவிலக்கணம் வகுத்த Certis Lanka...

2024-04-09 15:30:26
news-image

ஐந்து நட்சத்திர சொகுசு பூட்டிக் ஹோட்டலான...

2024-04-07 14:31:49
news-image

BAIC X55 II SUV வாகனங்களுக்கான...

2024-04-05 02:01:08
news-image

5 வருட காலத்தில் ஃபுட் ஸ்டூடியோ...

2024-04-05 07:00:05
news-image

பான் ஏசியா வங்கியுடன் புத்தாண்டு மாயவித்தையை...

2024-04-04 18:14:00
news-image

சம்பத் கார்ட்ஸ் “சம்பத் பாரம்பரியம்” புத்தாண்டு...

2024-04-04 10:11:20
news-image

கொழும்பு Radisson ஹோட்டலில் புதன்கிழமைகளில் Sri...

2024-04-05 10:18:57
news-image

பிரிட்டிஷ் கவுன்சில் 2024 - 25...

2024-04-01 16:11:16
news-image

USAID அமைப்புடன் இணைந்து ‘Charge while...

2024-04-01 14:23:44
news-image

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு மாதாந்தம்...

2024-04-01 14:24:58