47 இலட்சம் ரூபா பெறுமதியான பல வகையான போதைப்பொருட்களுடன் நபர் ஒருவரை விமான நிலையத்தில் வைத்து பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப்பிரிவினர் கைது செய்துள்ளனர்.

சென்னையில் இருந்து வந்த நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இவரிடமிருந்து 320 கிராம் ஹெரோயின், 52 கிராம் ஐஸ், 230 கிராம் ஹஷிஷ் ஆகிய போதைப்பொருட்களை பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப்பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.

இந்நிலையில் கைது செய்தவரிடம் மேலதிக  விசாரணைகளை பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப்பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.