வரலாற்று முக்கியத்துவமிக்க திம்புலாகலை ஆரண்ய சேனாசனவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள பிரவெனா மண்டபம், மகா சங்கத்தினருக்கான தங்குமிட விடுதி மற்றும் புதிய நுழைவாயில் ஆகியவற்றை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நேற்று காலை திறந்து வைத்தார்.
நேற்று காலை திம்புலாகலை ஆரண்ய சேனாசனவிற்கு விஜயம் செய்த ஜனாதிபதி முதலில் நினைவுப் பலகையை திரைநீக்கம்செய்து மகா சங்கத்தினரின் பிரித் பாராயனத்திற்கு மத்தியில் பிரிவெனா கட்டடத் தொகுதியையும் மகா சங்கத்தினருக்கான தங்குமிட விடுதியையும் திறந்து வைத்தார்.
மன்னர் காலம் முதல் நாட்டின் முக்கிய ஆரண்ய சேனாசனவாக விளங்கும் திம்புலாகலை ஆரணய சேனாசனவிலுள்ள பிக்குகளுக்கு தேவையான வசதிகளை வழங்கி உள்நாட்டு, வெளிநாட்டு பக்தர்கள் தரிசிப்பதற்கான புண்ணிய பூமியாக இதனை அபிவிருத்திசெய்யும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன் எடுக்கப்படும் என்று ஜனாதிபதி தெரிவித்தார்.
“எழுச்சிபெறும் பொலன்னறுவை” மாவட்ட அபிவிருத்தி திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த கட்டடத் தொகுதிகளுக்காக 400 இலட்சம் ரூபா செலவிடப்பட்டுள்ளது. இப்புண்ணிய பூமியிலுள்ள புதிய நுழைவாயில் நிர்மாணப் பணிகளுக்காக டயலொக் ஆசியாடா நிறுவனம் நிதிப்பங்களிப்பினை வழங்கியுள்ளது. நிர்மாணப் பணிகளுக்கு உதவி வழங்கியவர்களுக்கு ஜனாதிபதி அன்பளிப்புகளை வழங்கினார்.
திம்புலாகலை ஆரண்ய சேனாசனவின் தலைவர் சங்கைக்குரிய மில்லானே சிரியாலங்கார நாயக்க தேரருக்கு விகாரையின் ஓவியமொன்றை ஜனாதிபதி வழங்கி வைத்தார்.
அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ, வடமத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் பேசல ஜயரத்ன, பொலன்னறுவை மாவட்ட செயலாளர் ரஞ்சித் ஆரியரத்ன, கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் சிறிமவன் ரணசிங்க ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
இதேநேரம் “ஜனாதிபதி சதஹம் யாத்ரா” சமய உரைத்தொடரின் பொசொன் பௌர்ணமி தின உரை நேற்று வரலாற்று முக்கியத்துவமிக்க திம்புலாகலை ரஜ மகா விகாரையில் இடம்பெற்றது.
பொலன்னறுவை பௌத்த சங்கத்தினால் வருடாந்தம் ஏற்பாடு செய்யப்படும் பொசொன் அன்னதான நிகழ்வு 58ஆவது தடவையாக இன்றும் பொலன்னறுவையில் இடம்பெறுகிறது.
மகிந்த தேரர் இலங்கைக்கு வருகை தந்த பொசொன் பௌர்ணமி தினத்தில் வரலாற்று முக்கியத்துமிக்க புண்ணியஸ்தலங்களுக்கு வருகை தரும் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு பொலன்னறுவை பௌத்த சங்கத்தின் தலைவர் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் ஆலோசனையின் பேரில் அன்னதான நிகழ்வு ஏற்பாடு செய்யப்படுகிறது.
மகா சங்கத்தினருக்கான அன்னதானம் வழங்கப்பட்டதன் பின்னர், ஜனாதிபதியின் தலைமையில் பொதுமக்களுக்கான அன்னதான நிகழ்வு அரம்பித்து வைக்கப்பட்டது. ஸ்ரீ லங்கா அமரபுர நிகாயவின் உடரட அமரபுர பிரிவின் அனுநாயக்க தேரர் ஜப்பானின் தலைமை சங்க நாயக்க தேரர் சங்கைக்குரிய யாலகமுவே தம்மிஸ்ஸர நாயக்க தேரரினால் விசேட அனுசாசன உரை நிகழ்த்தப்பட்டது. சங்கைக்குரிய லியங்கஸ்வகுரே தேவானந்த நாயக்க தேரர் தலைமையிலான மகா சங்கத்தினர் இந்நிகழ்வில் பங்குபற்றினர்.
நாட்டின் பல பாகங்களிலிருந்தும் பொலன்னறுவை புண்ணிய பூமிக்கு வருகை தந்திருந்த பெரும் எண்ணிக்கையான மக்கள் இந்த அன்னதான நிகழ்வில் பங்கேற்றனர். அவர்களுக்கான அன்னதான வழங்கும் நடவடிக்கைகளில் ஜனாதிபதி பங்குபற்றினார்.
பொலன்னறுவைக்கு வருகை தரும் பக்தர்களுக்காக இன்று இரவு, பகல் அன்னதானம் வழங்கப்படவுள்ளது.
அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ, பாராளுமன்ற உறுப்பினர்களான நாலக கொலொன்னே, சிறிபால கம்லத், வடமத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் பேசல ஜயரத்ன, பொலன்னறுவை நகர பிதா சானக்க சிதத் ரணசிங்க, பொலன்னறுவை மாவட்ட செயலாளர் ரஞ்சித் ஆரியரத்ன ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM