(இராஜதுரை ஹஷான்)

வடக்கு மக்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் நோக்கில் வட மாகாணத்தில் கடற்றொழில் நடவடிக்கையை அபிவிருத்தி செய்ய அரசாங்கம் தீர்மானம் மேற்கொண்டுள்ளது.

அந்த வகையில் பருத்துத்துதறை, பேசாலை ஆகிய இடங்களில் இரு கடற்றொழில் துறைமுகங்களும் யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் மாவட்டங்களில் 8 கடற்றொழில் துறைமுகங்களும் முல்லைத்தீவில் 6 கடற்றொழில் துறைமுகங்களும் கிளிநொச்சி மாவட்டத்தில் மூன்று கடற்றொழில் துறைகங்களையும் அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைவாக வட மாகாணத்தில் கடற்றொழில் துறையை மேம்படுத்துவதற்காக 158 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவியை வழங்குவதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி முன்வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.