(எம்.சி. நஜிமுதீன்)

எமது ஆட்சியின்போது பாதாள உலகக் குழுக்களின் செயற்பாடுகள் முடக்கப்பட்டு மக்கள் நிம்மதியாக வாழக்கூடிய சூழல் நிலவியது. ஆனால் தற்போது நாட்டில் இவர்களின் நடவடிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

எமது ஆட்சியின்போது பாதாள உலகக் குழுக்களின் செயற்பாடுகள் முடக்கப்பட்டு மக்கள் நிம்மதியாக வாழக்கூடிய சூழல் நிலவியது. ஆனால் நாட்டில் தற்போது பாதாள உலகக் குழுக்களின் நடவடிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. 

இவ்வாறானவர்கள் அரசியல்வாதிகளின் அனுசரணையிலேயே இயங்கிக்கொண்டிருக்கின்றன. இது மிகவும் பயங்கரமான நிலையாகும். இவ்வாறான நிலை தொடர்ந்து நீடித்தால் மக்கள் பாதுகாப்பாக வாழ முடியாத நிலை உருவாகும்.

அரசாங்கத்திலிருந்து வெளியேறியுள்ள சுதந்திரக் கட்சியின் 16 பேர் அணி எமது கட்சியுடன் இணைந்துகொள்வதற்கு முன்வருவார்களானால் அவர்களுக்கு  அங்கத்துவம் வழங்குவதற்கு நாம் பின்னிற்கப்போவதில்லை. 

மேலும் ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் உதயங்க வீரதுங்கவை நாட்டுக்கு வந்து விசாரணைகளுக்கு முகம்கொடுக்குமாறு வேண்டிக்கொண்டுள்ளோம். எனினும் அவரின் பிள்ளைகளின் பரீட்சையினால் அவர் நாடு திரும்புவதற்கு இன்னும் ஒரு மாத காலம் வரையில் தேவைப்படும் என்றார்.