யாழ்ப்பாணம் சுழிபுரம் பகுதியில் சிறுமையை துஷ்பிரயோகத்திற்குட்படுத்தி கொலை செய்த சந்தேகநபர் எதிர்வரும் ஜூலை மாதம் 11 ஆம் திகதி வரை விளக்கமறியில் வைக்கப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட 6 பேரில் ஒருவர் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். ஏனையோரில் இருவர் கண்கண்ட சாட்சிகளாக உள்ளனர். பிரதான சந்தேகநபருடன் மற்றொருவரும் சேர்ந்தே சிறுமியை அழைத்துச் சென்றுள்ளதை அவர்கள் கண்டுள்ளனர். மற்றோரு சந்தேகநபர் தேடப்படுகிறார்" என்று நீதிவான் முன்னிலையில் பொலிஸார் சமர்ப்பணம் செய்தனர்.

சுழிபுரம் பகுதியைச் சேர்ந்த சிவனேஸ்வரன் றெஜீனா (வயது - 6 ) என்ற சிறுமி அப்பகுதி தோட்டக் கிணற்றிலிருந்து நேற்றுமுன்தினம்  திங்கட்கிழமை சடலமாக மீட்கப்பட்டார்.

சம்பவத்தையடுத்து சிறுமியின் உறவினர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் நால்வர் பொலிஸார் அழைத்துச் செல்லப்பட்டு தடுத்து வைத்து விசாரணைக்கு உள்படுத்தப்பட்டனர். மேலும் இருவர் பின்னர் விசாரணைக்கு உள்படுத்தப்பட்டனர்.

இந்த நிலையில் குற்றத்தை ஏற்றுக்கொண்டு வாக்குமூலம் வழங்கிய பிரதான சந்தேகநபர் உள்பட 6 பேர் மல்லாகம் நீதிவான் முன்னிலையில் இன்று பிற்பகல் ஆஜர்படுத்தப்பட்டனர்.

"பிரதான சந்தேகநபர் குற்றத்தை ஒப்புக்கொண்டார். ஏனையவர்களில் இருவர், கண்கண்ட சாட்சிகளாக உள்ளனர். பிரதான சந்தேகநபரும் மற்றொருவரும் சிறுமியை பற்றைக்குள் அழைத்துச் சென்றதைக் கண்டுள்ளனர்.

அழைத்துச் சென்றவர்களில் ஒருவர் தேடப்படுகிறார்" என்று பொலிஸார் சமர்ப்பணம் செய்தனர்.

வழக்கை விசாரித்த நீதிவான் பிரதான சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டதுடன், ஏனைய ஐவருக்கும் பிணை வழங்க அனுமதித்தார்.

6 வயது பிஞ்சு மழலை கொலை : சந்தேக நபரின் பரபரப்பு வாக்கு மூலம்