நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 2332 பேரை கைதுசெய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

இச் சுற்றிவளைப்பு நடவடிக்கையானது நேற்று இரவு 10 மணி முதல் நள்ளிரவு 12 வரையும் இன்று அதிகாலை 3.00 மணிமுதல் 05 மணிவரையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களுள்  423 பேர் பிடியணை பிறப்பிக்கப்பட்ட கைதிகள் எனவும் குறிப்பிட்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளர் வாகன போக்குவரத்து விதி மீறல் சம்பந்தமாக 5254 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இச் சுற்றிவளைப்பு நடவடிக்கையானது பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜசுந்தரவின் உத்தரவுக்கமைய மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.