சீனாவின் உதவியுடன் முன்னெடுக்கப்படும் பாரிய அபிவிருத்தி திட்டங்களை இலங்கை அவதானமாக கையாளவேண்டும் என சர்வதேச நாணயநிதியம் தெரிவித்துள்ளது.

சீனாவின் புதிய பட்டுப்பாதை திட்டத்தின் மூலம் பயனைபெறுவதற்கு இலங்கை சீனாவின் உதவியுடன் முன்னெடுக்கப்படும் பாரிய அபிவிருத்தி திட்டங்களை கவனமாக கையாள்வது அவசியம் என  சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

சீனாவின் நிதியுதவியுடன் முன்னெடுக்கப்படும் பாரிய அபிவிருத்தி திட்டங்கள் பாரிய பிராந்திய வர்த்தகம் மற்றும் நிதி ஒருங்கிணைப்பு மூலம் இலங்கைக்கு நன்மையை கொண்டுவரலாம் என தெரிவித்துள்ள சர்வதேச நாணய நிதியம், இலங்கையின் பாரிய கடன் மற்றும் சமூக தேவைகளை கருத்தில்கொள்ளும்போது இலங்கை இந்த திட்டங்களை நிதானமாக கையாளவேண்டும்  என குறிப்பிட்டுள்ளது.