(இரோஷா வேலு) 

களுத்துறை - பொலகம்பொல பிரதேசத்தில் வைத்து வெளிநாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட ரிவோல்வர் வகை கைத்துப்பாக்கியுடன் நபரொருவர் களுத்துறை சட்டஅமுலாக்கல் பிரிவு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு மத்துகம பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

இது குறித்து மேலும் தெரிவிக்கப்படுவதாவது, 

களுத்துறை - மீகஹதென்ன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொலகம்பொல பகுதியில் வைத்து வெளிநாட்டின் தயாரிக்கப்பட்ட ரிவோல்வர் வகை கைத்துப்பாக்கியுடன் நபரொருவர் களுத்துறை சட்டஅமுலாக்கல் பிரிவு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். 

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் மேலதிக விசாரணைகளுக்காக மத்துகம பொலிஸில் ஒப்படைக்கப்பட்ட நிலையில், மத்துகம பொலிஸாரால் இன்று  நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது. 

இச்சம்பவத்தில் மத்துகம கலபடவத்த வீதியைச் சேர்ந்த 43 வயதுடைய ஆணொருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். இவரை கைதுசெய்த வேளையில் அவரிடமிருந்து வெளிநாட்டு தயாரிப்பான ரிவோல்வர் வகை கைத்துப்பாக்கியொன்றும், அதற்கு பயன்படும் 4 துப்பாக்கி ரவைகளும் கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.