இந்தியாவின் பொதுத்துதறை வங்கிகளிலிருந்து கடனாக பெற்ற பணத்தொகையினை செலுத்துவதற்கு தான் பல்வேறு முயற்சிகைள மேற்கொண்டு வருவதாக விஜய் மல்லையா தெரிவித்துள்ளார்.

தொழிலதிபர் விஜயம் மல்லையா ஸ்டேட் வங்கி உள்ளிட்ட படல்வேறு வங்கிகளில் சுமார் 9,000 கோடி ரூபா கடன்களை பெற்று, அதனை திரும்ப செலுத்தாமல் லண்டனுக்கு தப்பிச் சென்று விட்டார்.

இதனையடுத்து கடனை திரும்ப செலுத்தாத காரணத்தினால் பல வங்கிகள் அவருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. இதனையடுத்து அவரை இந்தியாவுக்கு வரவழைப்பதற்கான நடவடிக்கைகளை இந்திய அரசு மேற்கொண்டதுடன் விஜய் மல்லையாவின் கடவுச்சீட்டையும் மத்திய அரசு முடக்கியது.

எனினும் அவர் தொடர்ந்தும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்தமையினால் அவரை தேடப்படும் குற்றவளியாக  இந்திய நீதிமன்றம் அறிவித்தது. 

இந் நிலையில் விஜயம் மல்லையா தற்போது தனது டுவிட்டர் பக்கத்தில், பொதுத்துறை வங்ககளில் பெற்ற கடனை திரும்ப செலுத்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டதாக பிரதமர் மோடி மற்றும் நிதி அமைச்சருக்கு கடந்த 2016 ஆம் கடிதம் எழுதியதாகவும் எனினும் இந்தக் கடிதம் தொடர்பாக தான் இன்றுவரை எந்த பதில் கடிதத்தை பெறவில்லை என்றும் தெரிவித்ததுடன் பொதுத்துறை வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய கடன்களை திரும்ப செலுத்த தான் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.