இலங்கை உள்­ள­டங்­க­லான ஆசிய நாடு­க­ளி­லி­ருந்து  இறக்­கு­மதி செய்­யப்­படும் பொருட்கள் மீதான சுங்க வரியைக் குறைத்­துள்­ள­தாக சீனா  நேற்று செவ்­வாய்க்­கி­ழமை அறி­விப்புச் செய்­துள்­ளது.

இதன் பிர­காரம்  இலங்கை, இந்­தியா, பங்­க­ளாதேஷ்,  லாவோஸ்,  தென் கொரியா உள்­ள­டங்­க­லான   நாடு­க­ளி­லி­ருந்து இறக்­கு­மதி செய்­யப்­படும்  கால்­நடை தீவ­ன­மாக பயன்­படும்  சோயா அவரை உள்­ள­டங்­க­லான பொருட்­க­ளுக்­கான சுங்க வரி  எதிர்­வரும் ஜூலை மாதம்  முதலாம் திக­தி­யி­லி­ருந்து  பூஜ்­ஜி­ய­மாக குறைக்­கப்­ப­ட­வுள்­ளது. 

அமெ­ரிக்­கா­வுக்கும் சீனா­வுக்­கு­மி­டை­யி­லான வர்த்­தகப் போர் கார­ண­மாக அமெ­ரிக்­கா­வி­லி­ருந்து இறக்­கு­மதி செய்­யப்­படும் அவரை  உற்­பத்­தி­க­ளுக்­கான சுங்க வரி அதி­க­ரிக்­கப்­ப­டு­கின்ற நிலையில்  மேற்­படி ஆசிய நாடு­க­ளி­லு­மி­ருந்து இறக்­கு­மதி செய்­யப்­படும் பொருட்­க­ளுக்­கான  சுங்க வரியை  குறைக்க சீனா நட­வ­டிக்கை எடுத்­துள்­ளது