இந்திய, ராமேஸ்வரம் கடற்பரப்புக்குள் சட்டவிரேதாமான முறையில் ஊடுருவிய இலங்கையைச் சேர்ந்த ஒருவரை பைபர்படகுடன் கைதுசெய்துள்ளதாக ராமேஸ்வரம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் தலைமன்னார் பகுதியைச் சேர்ந்த சகாயபஸ்திபன் (வயது 34) என்பவராவார்.

ராமேஸ்வரம் கடற்பகுதியில் ஊடுருவிய இவரை உச்சிபுளி அருகே வலாங்காபுரி கடற்கரைப்பகுதியில் வைத்து பொலிஸார் கைதுசெய்ததுடன் இவர் பயணம் மேற்கொண்ட பைபர் படகையும் கைப்பற்றியுள்ளனர்.

இவர் இலங்கையிலிருந்து தங்கம் கடத்தி வந்தவரா அல்லது ரமேஸ்வரத்திலிருந்து அகதிகளை ஏற்றிச் செல்ல வந்துள்ளாரா என்பது தொடர்பாக பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.