இந்திய மீனவர்கள் மற்றும் மீன்பிடித்துறை அதிகாரிகள் கொண்ட குழு நாளை புதன்கிழமை மாலை மதுரையில் இருந்து இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது. 

இலங்கை எல்லையில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் கைப்பற்றப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளில் 10 படகுகளை  இரண்டாம் கட்டமாக கடந்த 15 ஆம் திகதி இலங்கை அரசாங்கம் விடுவித்தது. 

இந்நிலையில் விடுவிக்கப்பட்ட 10 தமிழக படகுகளில் பயன்படுத்தும் வகையிலான படகுகளை தேர்வு செய்து தமிழக அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்க குறித்த குழு இலங்கை வருகிறது. 

இதனையடுத்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் நடவடிக்கையைத் தொடர்ந்து மீட்பு குழு இலங்கை வந்து தெரிவு செய்யப்பட்ட படகுகளை மீட்டு தமிழகம் கொண்டு செல்லும் என தெரிவிக்கப்படுகின்றது.