கொழும்பு, கோட்டையிலிருந்து பதுளை நோக்கி பயணித்த பொடி மெனிக்கே புகையிரதத்தில் பாய்ந்து ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். 

தலவாக்கலை வட்டகொடை புகையிரத நிலையத்திற்கு அருகில் இன்று (26-06-2018) மதியம் 12.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

இவ்வாறு  தற்கொலை செய்துகொண்டவர், 45 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஒருவரேயென தெரிவிக்கப்படுகின்றது. 

உயிரிழந்தவரின் சடலம் லிந்துலை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.