அரசியல்வாதிகள் தொடர் கொலை: ஒட்டுமொத்த பொலிஸாரும் கைது

By T Yuwaraj

26 Jun, 2018 | 01:48 PM
image

மெக்சிகோவில் நூற்றுக்கணக்கான அரசியல்வாதிகள் தொடர்ந்து கொல்லப்பட்ட நிலையில், சந்தேகத்தின் பெயரில் நகர பாதுகாப்பு செயலாளரை சிறப்பு படையினர் கைது செய்வதை தடுத்த .நகரல் உள்ள அனைத்து பொலிஸாரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வட அமெரிக்க நாடான மெக்சிகோவில் அடுத்த மாதம் முதாலம் திகதி பொதுத்தேர்தல் இடம்பெறவுள்ளது  இதில் அதிபர், செனட்டர், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் 3 ஆயிரம் பிராந்திய பதவிகளுக்கும் தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் திகதி அறிவிக்கப்பட்ட பின் அங்கு தொடர்ந்து அரசியல் கொலைகள் இடம்பெற்று வருகின்றன.

போதை மாபியா ஆதிக்கம் கொண்ட நாடான மெக்சிகோவில் இது போன்ற அரசியல் கொலைகள் வழக்கமானது என்றாலும், சமீபத்தில் நூற்றுக்கணக்கான அரசியல்வாதிகள் கொல்லப்படுவது வாடிக்கையாகிவிட்டது. இந்த வாரத்தில் மட்டும் மூன்று முக்கிய அரசியல்வாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

மிசோவ்கன் மாநிலத்தில் உள்ள ஒகாம்போ நகர மேயர் பதவிக்கு போட்டியிட்ட பெர்னாட்னோ ஜுவாரெஸ் என்பவர் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த கொலையில் சம்பந்தப்பட்ட குழுவுக்கும் நகர பாதுகாப்பு செயலாளர் ஆஸ்கர் கார்சியாவுக்கும் தொடர்பு உள்ளதாக குற்றம் சாட்டப்பட்டது.

இதனையடுத்து, ஆஸ்கரை கைது செய்ய சிறப்பு படையினர் ஒகாம்போ நகருக்கு விரைந்தனர். ஆனால், ஒகாம்போ நகர பொலிஸார், சிறப்பு படையினரை நகரினுள் அனுமதிக்கவில்லை. இதனை அடுத்து, நகர காவல் பணியில் இருந்த 27 பொலிஸாரை சிறப்பு படையினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானில் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டம் ;...

2022-09-30 16:43:03
news-image

ஆளில்லா விமானத்தால் இருளில் தவித்த ஆயிரக்கணக்கான...

2022-09-30 22:20:49
news-image

10 ஆயிரம் கோடி இந்திய ரூபா...

2022-09-30 13:48:05
news-image

ரஷ்யா - உக்ரைன் போர் :...

2022-09-30 13:47:27
news-image

காபுலில் கல்விநிலையமொன்றில் தற்கொலை தாக்குதல் -...

2022-09-30 12:11:12
news-image

வளர்ப்பு மகனை தவறான வழிக்குச் செல்ல...

2022-09-30 13:43:09
news-image

பெண்­ணாக மாறு­வ­தற்கு முன் 7 சிறார்­களை...

2022-09-30 13:42:26
news-image

3 ஆம் சார்ள்ஸ் மன்னரின் உருவம்...

2022-09-30 13:41:21
news-image

பிரச்சினைகளுக்கு தீர்வுகாண்பதில் இந்தியா - ஜப்பான்...

2022-09-29 16:28:26
news-image

பிரதமர் மோடியின் ஆலோசனைக்கு பிளிங்கன் பாராட்டு

2022-09-29 16:30:59
news-image

உலகத்துக்கான பாதுகாப்பு தயாரிப்புகளை உருவாக்குங்கள் -...

2022-09-29 16:22:02
news-image

சிட்னியில் ஆபத்தான கரும்பு தேரைகளால் அச்சம்

2022-09-29 14:57:25