விண்வெளியில் உள்ள குப்பைகளை சுத்தம் செய்வதற்காக பிரிட்டன் புதிய  செயற்கைக்கோள் ஒன்றை அனுப்பியுள்ளது.

சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் உதவியுடன் இந்த செயற்கைக்கோளை பிரிட்டன் தயாரித்துள்ளது. இந்த செயற்கைக்கோளுக்கு ரிமூ "டீபிரிஸ்" (Remove DEBRIS) என பெயரிடப்பட்டுள்ளது.

விண்வெளியில் உள்ள செயற்கைகோள் குப்பைகளை இது விரைவில சுத்தம் செய்ய உள்ளதாகவும் இதன் முதற்கட்டமாக சில சோதனைகளை செய்யவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்வெளியில் மனித குப்பைகள் அதிகரித்து காணப்படுகின்றது. நாம் பூமிலிருந்து அனுப்பிய செயலிழந்த செயற்கைகோள்கள், உடைந்த செயற்கோள், விமான பாகங்கள், பல ஆராய்ச்சி பாகங்கள் என விண்வெளி முழுக்க நிறைந்து இருக்கிறது. இதனால் இன்னும் சில வருடங்களில் விண்வெளி மிகப்பெரிய குப்பை கூளமாக மாறும் என நாசா தெரிவித்துள்ளது..

இதை அகற்றுவதற்கு நாசா பல நாட்களாக செயற்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது பிரிட்டன் முதல் முறையாக களமிறங்கியுள்ளது. இதற்காக ரிமூடீபிரிஸ்" (RemoveDEBRIS) செயற்கைக்கோளை அனுப்பியுள்ளது. இந்த செயற்கைகோள் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் உதவியுடன் அனுப்பப்பட்டுள்ளது. 

இதில் பெரிய தூண்டில் போன்ற வலை உள்ளது இந்த வலை விண்வெளியில் உள்ள குப்பைகளை மொத்தமாக பிடித்து பூமிக்கு எடுத்து வரும். இந்த வலை சிறப்பு, கலப்பு உலோகம் மூலம் வேகமாக விண்வெளியில் சுற்றும் குப்பைகளை பூமிக்கு கொண்டு வரும். என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் அந்த குப்பைகளை பூமிக்கு கொண்டு வருவது மிகவும் கடினம் என்று கூறப்படுகிறது. அதே சமயம் இப்போது இந்த செயற்கைகோள் முதற்கட்ட சோதனைகளை மட்டுமே செய்யும்.சில சிறிய பொருட்களை மட்டுமே அது பூமிக்கு கொண்டு வரும். பூமியின் பாதையை நுழைந்த வுடன் அந்த குப்பை எரிந்துவிடும் என்பதால் இந்த முறை எளிதாக இருக்கும்