இலங்கை மற்றும் மேற்கிந்தியத்தீவுக்கிடையிலான மூன்றாவது டெஸட் போட்டியில் இலங்கை அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் ஐந்து விக்கெட்டுக்களை இழந்து 81 ஓட்டங்களை பெற்றுள்ளது.
அந்த வகையில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டி சமநிலையில் முடிந்தது.
இந்நிலையில், மூன்றாவதும் கடைசியுமான டெஸ்ட் போட்டி பார்படோஸில் பகலிரவு ஆட்டமாக நடைபெற்று வருகின்றது.
இலங்கைக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாளில் மேற்கிந்தியத் தீவுகள் அணி முதல் இன்னிங்ஸில் 204 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழக்க, அதனைத் தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை அணி 99 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்து திணறி வருகின்றது.
இப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி முதலில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கியது.
அதன்படி மேற்கிந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 69.3 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 204 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. மேற்கிந்திய அணி சார்பில் ஷேன் டாவ்ரிச் 71 ஓட்டங்களையும் ஹோல்டர் 74 ஓட்டங்களையும் அதிகபடியாக பெற்றுக் கொண்டனர்.
பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் லஹிரு குமர 4 விக்கெட்டுக்களையும் ரஜித 3 விக்கெட்டுக்களையும் சுரங்க லக்மால் 2 இரண்டு விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.
இதையடுத்து இலங்கை அணி தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்தது. இலங்கை அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாகக் களமிறங்கிய குசல் ஜனித் பெரேரா (0), உடவத்த (4) என வந்த வேகத்திலேயே திரும்பினர்.
அதன்பிறகு நிதானமாக ஆடிய குணதிலக்கவும் 29 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க மறுமுனையில் ஆடிவந்த குசல் மெண்டிஸும் 22 ஓட்டங்களுடன் வெளியேறினார்.
அதன்பிறகு வந்த தனஞ்சய டி சில்வாவும் 8 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க இலங்கை அணி 30 ஓவர்களில் 85 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்தது. ரோஷேன் சில்வா 3, திக்வெல்ல 13 ஓட்டங்களுடன் ஆடிக்கொண்டிருக்க இரண்டாம் நாள் ஆட்ட நேரம் முடிவுக்கு வந்தது. அப்போது இலங்கை அணி 36 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 99 ஓட்டங்களை எடுத்திருந்தனர்.
இந் நிலையில் மூன்றாம் நாள் ஆட்டத்தின் போது 99 ஓட்டங்களுடன் தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை அணியின் வீரர்களான ரோஷேன் சில்வா 11 ஓட்டங்களுடனும் திக்வெல்ல 42 ஓட்டங்களுடனம் ஆட்டமிழந்து வெளியேறினர்.
அதன் பிறகு களம் புகுந்த தில்ருவான் பெரேரா 11 ஒட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார். இவரையடுத்து அடுத்தடுத்து களம் புகுந்த சுரங்க லக்மல், கசுன் ராஜித டக்கவுட் முறையிலும் ஆட்டமிழந்து வெளியேறினர்.
இறுதியாக இலங்கை அணி தனது முதல் இன்னிங்ஸில் 59 ஓவர்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்து 154 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக் கொண்டது.
மேற்கிந்திய அணி சார்பில் ஜேசன் ஹோல்டர் 4 விக்கெட்டும், ஷனோன் காப்ரியல் 3 விக்கெட்டும், கீமர் ரோச் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, நேற்யை தினமே தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்த மேற்கிந்திய அணி இலங்கை அணியின் பந்துவீச்சால் கதிகலங்கியது அந்த வகையில் மேற்கிந்திய அணியின் முக்கிய துடுப்பாட்ட வீரர்களான பிரத்வைட்,டேவோன் ஸ்மித், கெய்ரன் பவல், ஷாய்ஹோப் மற்றும் ரோஸ்டன் சேஸ் ஆகியோர் இலங்கையின் பந்துவீச்சை சமாளிக்க முடியாது ஒற்றை ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து வெளியேறினர்.
மேற்கிந்திய அணி 56 ஓட்டங்களை எடுப்பதற்கு முன்னரே இலங்கை அணி எட்டு விக்கெட்டுக்களை கைப்பற்றியது. இறுதியாக தனது இரண்டாவது இன்னிங்ஸில் 32.2 ஓவர்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்து 93 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.
இலங்கை அணி சார்பில் சுரங்க லக்மால், கசுன் ராஜித தலா 3 விக்கெட்டுக்களையும் லஹிரு குமரா 2 விக்கெட்டுக்களையும் தில்ருவான் பெரேரா ஒரு விக்கெட்டையும் பெற்றுக் கொணடனர்.
இதன் மூலம் வெற்றிபெறுவதற்கு 144 ஓட்டங்கள் என்ற நோக்குடன் களத்தில் இறங்கிய இலங்கை அணியும் மேற்கிந்திய அணியின் வழியை பின்பற்றி அடுத்தடுத்து விக்கெட்டுக்களை பறிகொடுத்தது.
அந்த வகையில் ஆரம்ப துடுப்பாட்டக்காரர்களான மஹேல உடவத்த டக்கவுட் முறையிலும் தனுஷ்க குணதிலக்க 21 ஓட்டங்களையும் தனஞ்சய டிசில்வா 17 ஓட்டங்களையும் ரோசான் சில்வா ஒரு ஓட்டத்தையும், நிரோசன் டிக்வெல்ல 6 ஓட்டங்களையும் பெற்று வெளியேறினர்.
இறுதியாக இலங்கை அணி மூன்றாம் நாள் ஆட்ட முடிவு நேரத்தின் போது 24 ஓவர்களுக்கு ஐந்து விக்கெட்டுக்களை பெற்று 81 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.
குசல் மெண்டீஸ் 25 ஓட்டங்களுடனும் தில்ருவான் பெரேரா ஒரு ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழக்காது இருந்தனர்.
இப் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெறுவதற்கு 63 ஓட்டங்கள் மாத்திரம் தேவை. ஆனால் இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களே மேற்கிந்திய அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாது அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறியுள்ளதனால்.
இதன் பின் களமிறங்கும் பின் வரிசை வீரர்கள் அவர்களின் பந்துகளை சமாளித்து வெற்றி இலக்கை அடைவார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
எவ்வறொனினும் மேற்கிந்திய அணி தொடரில் ஒரு போட்டியில் வெற்றிபெற்று முன்னிலையில் உள்ளதானால் இப் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றே ஆக வேண்டும். இல்லையேல் தொடர் மேற்கிந்திய அணி வசமாகிவிடும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM