சீமெந்து ஏற்றி வந்த லொறியொன்று மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதாக வாகரைப் பொலிஸார் தெரிவித்தனர்.

வாகரைப் பொலிஸ் பிரிவிலுள்ள மட்டக்களப்பு - திருகோணமலை வீதி கண்டலடியில் நேற்று இடம்பெற்ற குறித்த விபத்தில்  லொறி சேதத்திற்குள்ளான அதேவேளை லொறிச் சாரதி மயிரிழையில் உயிர்தப்பியுள்ளார்.

உதவியாளரின்றி தனியே லொறியைச் செலுத்தி வந்த சாரதி தூக்கக் கலக்கத்தில் கட்டுப்பாட்டை மீறி லொறியை செலுத்தியதனால் வீதி மருங்கிலிருந்த பெரிய நாவல் மரத்தில் மோதுண்டதாக ஆரம்பக் கட்ட விசாரணைகளிலிருந்து தெரிய வந்திருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை வாகரைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றன.