இலங்கை ரூபாவின் பெறுமதியில் தற்போது சற்று அதிகரிப்பு ஏற்படத் தொடங்கியுள்ளது. கடந்த வாரம் வரை டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதி 161 ரூபாவையும் தாண்டி வீழ்ச்சியடைந்து சென்று கொண்டிருந்தது.

அந்நியச் செலாவணி குறைவு, அந்நிய முதலீடுகள் வீழ்ச்சி என்பனவும் இதற்கான காரணங்களாக கூறப்பட்டபோதும், இதன் காரணமாக எரிபொருள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலையும் அதிகரித்திருந்ததுடன் இறக்குமதிப் பொருட்களின் விலையும் அதிகரிக்க நேர்ந்திருந்தது.

இந்நிலையில் தற்போது டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதி 160 ரூபாவரை முன்னேற்றம் கண்டுள்ளமை குறிப்பிடதக்கது.