2018 உலகக் கிண்ணப் போட்டிகளில் முதல் சுற்றுடன் விடைபெற ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டிருந்த இரண்டு அணிகளுக்கு இடையில் நடைபெற்ற கடைசி ஏ குழு லீக் போட்டியில் எகிப்து அணியை 2 க்கு 1 என்ற கோல் கணக்கில் சவூதி அரேபியா வெற்றிகொண்டு ஆறுதல் அடைந்தது.

இப் போட்டியில் தோல்வி அடைந்த எகிப்து உலகக் கிண்ண வரலாற்றில் வயதில் கூடிய வீரரை தந்த பெருமையைப் பெற்றது.

எகிப்து அணித் தலைவரும் கோல்காப்பாளருமான ஈசாம் எல்ஹதாரி நேற்றைய போட்டியில் விளையாடியபோத அவரது வயது 45 வருடங்களும் 161 தினங்களுமாகும்.

முதலிரண்டு போட்டிகளில் விளையாடாமல் இருந்த எல்ஹதாரி இப் போட்டியில் விளையாடி வரலாறு படைத்தார். அத்துடன் எகிப்து அணியின் பெனல்டி ஒன்றையும் நிறுத்தி பெரும் பாராட்டையும் பெற்றார்.

நட்சத்திர வீரர் மொஹமத் சலாஹ் இப் போட்டியின் 22 ஆவது நிமிடத்தல் கோல் போட்டு எகிப்தை முன்னிலையில் இட்ட போதிலும் சல்மான் அல்பராஜ் (45+6 நி.) போட்ட பெனல்டி கோலும் முழுநேர உபாதையீடு நேரத்தில் (90+5 நி.) சலீம் அல்தௌசாரி போட்ட கோலும் சவூதி அரேபியாவுக்கு வெற்றியை ஈட்டிக்கொடுத்தனர்.

இதன் மூலம் ஏ குழுவில் மூன்றாம் இடத்தை சவூதி அரேபியா பெற்றுக்கொண்டது. 

முதல் சுற்று ஏ குழுவில் அணிகளின் இறுதி நிலைஅணி வி வெ தோ பெ    கொ நி பு   உருகுவே 3 3 0 0 5 0 +5 9   ரஷ்யா  3 2 0 1 8 4 +4 6   சவூதி அரேபியா      3 1 0 2 2 7 -5 3   எகிப்து 3 0 0 3 2 6 -4 0 

(குறிப்பு: வி: விளையாடிய போட்டிகள், வெ: வெற்றி, ச: வெற்றிதோல்வியில்லை, தோ: தோல்வி, பெ: பெற்ற கோல்கள், கொ: கொடுத்த கோல்கள், நி: நிகர கோல்கள், பு: புள்ளிகள்)

(என்.வீ.ஏ.)