(இரோஷா வேலு) 

இரத்மலானையில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் காயமடைந்த இராணுவ அதிகாரியை பாதுகாப்புக் காரணங்களுக்காக நாரேஹன்பிட்ட இரணுவ வைத்தியசாலைக்கு மாற்றியுள்ளதாக கல்கிஸை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து பொலிஸார் மேலும் தெரிவிக்கையில்,

கல்கிஸ்ஸை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இரத்மலானையில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் காயமடைந்த இராணுவ அதிகாரி களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இன் நிலையில் குறித்த இராணுவ அதிகாரி பாதுகாப்பு காரணங்களுக்காக நாரஹேன்பிட்ட இராணுவ வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். 

இச் சம்பவத்தில் காயங்களுக்கான இராணுவ அதிகாரி, கடந்த சில மாதங்களாக லெப்டினல் கேர்ணல் அதிகாரியொருவரின் பாதுகாப்பு கடமைகளின் நிமித்தம் அவரது வீட்டில் கடமையாற்றிவரும் நிலையில், யுவதி ஒருவருடன் காதல் வயப்பட்டுள்ளார். இது தொடர்பில் இராணுவ அதிகாரிக்கும் அந்த யுவதியின் முன்னாள் காதலனுக்குமிடையில் ஏற்பட்ட முரண்பாட்டின் காரணமாகவே இவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் ஆரம்ப கட்ட விசாரணைகளின் மூலம் தெரிவித்துள்ளனர்.  

மேலும் இச்சம்பவத்தில் தொடர்புடைய சந்தேகநபர்களை அடையாளம் கண்டுள்ள பொலிஸார், அவர்களை கைதுசெய்யும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.