(எம்.மனோசித்ரா)

தபால் சேவை ஊழியர்களின் பிரச்சினைகளுக்கு நாளை தீர்வினை வழங்க முயற்சிப்பதாக  தபால் சேவை அலுவல்கள் அமைச்சர் ஏ.எச்.எம். அப்துல் ஹலீம் தெரிவித்தார். 

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

தபால் ஊழியர்கள் முன்வைத்துள்ள கோரிக்கைகள் தொடர்பில் நாளை தேசிய சம்பள ஆணைக்குழுவுடன் கலந்துரையாடவுள்ளோம். இதன்போது அவர்களின் சம்பளப் பிரச்சினை தொடர்பான இறுதி தீர்மானம் எடுக்கப்படும். 

அத்துடன் இவ்வாறு மேற்கொள்ளப்படும் தீர்மானத்தை அமைச்சரவையில் சமர்ப்பித்து அதனை நடைமுறைப்படுத்துவதற்கான முயற்சிகளையும் மேற்கொள்வோம் என்றார்.