நாடு முழுவதிலும் உள்ள நோயாளர்களுக்கும் மருத்துவர்களுக்கும் அதி நவீன மருத்துவ ஆய்வுகளையும் நோயறிதல் சேவைகளையும் வழங்கும் தலைசிறந்த வைத்தியசாலையாக வெள்ளவத்தை Royal hospital (Pvt) Ltd விளங்குகின்றது. 

இந்த மருத்துவமனையானது மருத்துவ நிபுணர்களின் மத்தியில் மிகவும் பிரபல்யம் அடைந்துள்ளமையும் விசேட அம்சமாகும். அத்துடன் அதி நவீன தொழில்நுட்பமும் மிகவும் இறுக்கமான தர நியமனங்களும் சேர்ந்து மருத்துவப் பரிசோதனைகள் மிகவும் நம்பத்தகுந்தவையாகவும் காணப்படுகின்றது.

சர்வதேச தரத்திலான சுகாதார பராமரிப்பை வழங்கும் வெள்ளவத்தை Royal hospital (Pvt) Ltd இன் புதிய கிளையொன்று முதன்முறையாக Royal co-op வைத்தியசாலை என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ளது. 

இவ் வைத்தியசாலை குறித்து அங்குள்ள பொது முகாமையாளர் டாக்டர். இர்ஷாட் ஷபீர் தெரிவித்ததாவது, 

தொழில்நுட்ப ரீதியாக மேம்படுத்தப்பட்ட மருத்துவ வசதிகளுடன் இந்த வைத்தியசாலையானது 2 மாடிகளை கொண்ட பல்விசேடத்துவ வைத்தியசாலையாக செயற்பட்டு நோயறிதல், சிறியளவிலான சிகிச்சை வசதிகளுடன் ஒரே கூரையின் கீழ் சகல மருத்துவ தேவைகளையும் வழங்கி வருகின்றது. 

Royal co-op வைத்தியசாலையானது அதன் உயர் தன்மையையும் அனுபவமிக்க விசேட வைத்திய நிபுணர்களையிட்டும் பெருமிதப்படுகின்றது. இவர்கள் மருத்துவ மற்றும் சத்திர சிகிச்சைப் பிரிவுகளில் பரந்த வீச்சிலே நிபுணத்துவமுடையவர்களாக இருக்கின்றமையால் இவர்களுக்கு உயர் பயிற்சியும் அனுபவமும் கொண்ட வைத்தியசாலை மருத்துவ அதிகாரிகளும் தாதிப்பணியாளர்களும் உதவி வழங்கி வருகின்றனர். 

நோயாளர்களுக்கு தனித்துவமான சேவையும் வழங்குகின்றமை எமது Royal co-op வைத்தியசாலையின் சிறப்பம்சம்.

Royal co-op வைத்தியசாலையில் ஆலோசனைச் சேவைகள் , 24 மணித்தியால வெளிநோயாளர் பிரிவு , 24 மணித்தியால மருந்தகம் , அல்ட்ரா சவுன்ட் ஸ்கேனிங், எக்ஸ் ரே( X-RAY) படப்பிடிப்பு, ஆய்வுகூட வசதி, ஈ.சி.ஜி , உடற்பயிற்சி சேவைகள், கவுன்சிலிங், தடுப்பூசிகள் ஆகிய சேவைகள் வழங்கப்படுகின்றன. அத்துடன் 225 என்ற இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்துவதன் மூலம் E Channelling வசதியை பெற்றுக் கொள்ள முடியும். 

பற்சிகிச்சைப் பிரிவுகள் மற்றும் கண்சிகிச்சை பிரிவுகள் என்பன 2 மாதங்களில் புதிய கட்டிட நிர்மாணத்துடன் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் ஏனைய பெரிய சத்திரசிச்சைகளுக்கான கூடங்களும் அடுத்தடுத்த மாதங்களில் அமைக்கப்படவுள்ளது. 

அத்துடன் எதிர்காலத்தில் அதிநவீன உட்கட்டமைப்புக்களை மாத்திரம் கருத்தில் கொள்ளாது அதி உச்ச நோயாளர்களின் பராமரிப்புக்களை மீள்வரையறை செய்வதிலும் எமது Royal co-op வைத்தியசாலை விளங்கும்.

மேலும் Royal co- op வைத்தியசாலை மருத்துவ துறையிலே படிப்படியாக பரிணமித்து வரும் புத்தாக்கங்களுக்கு ஈடுகொடுத்துச் செயற்பட்டு வருகின்ற அதேவேளை நோயாளர்களுக்கு சிறந்த முறையில் தங்களின் சேவையை வழங்குவதை எண்ணி பெருமையடைவதாகவும் அவர் தெரிவித்தார்.