மாரவில, மகவெவ பகுதியில் 24 வயதுடைய நபர் ஒரு மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றார். அவர் குடிபோதைக்கு அடிமையானவர். சம்பவ தினமான நேற்று(24-06-2018) குறித்த நபர் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார்.

இதன்போது மனைவியிடம் மேலும் மது அருந்துவதற்காக பணம் கேட்டுள்ளார். மனைவி பணம் தர மறுத்தமையால் கோபமடைந்த கணவன், தனது ஒரேயொரு மகனை தூக்கிச் சென்று கடலில் வீசியுள்ளார்.

தனது மகனை கணவன் கடலில் வீசியதை கண்டு மனைவி கூக்குரலிட்டுள்ளார். உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்த பிரதேச மக்கள் கடலில் வீசப்பட்ட சிறுவனை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

சிறுவன் ஆபத்தான நிலையில் மாரவில வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருதாகவும், சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளதாகவும் தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.