டிக் டிக் டிக் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் ஜெயம் ரவி நடிக்கும் ‘அடங்க மறு ’படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.

டிக் டிக் டிக் என்ற படத்தின் மூலம் தன்னுடைய வித்தியாசமான கலைப்பயணத்தைத் தொடரும் நடிகர் ஜெயம் ரவிக்கும், தமிழ் ரசிகர்களுக்கு விண்வெளி பற்றிய பல அறிவியல் ரீதியிலான விளக்கங்களை காட்சிகளுடன் கொடுத்த இயக்குநர் சக்தி சௌந்தர்ராஜனுக்கும் பாராட்டுகள் தெரிவிக்கிறார்கள் தமிழ் ரசிகர்கள்.

இந்நிலையில் ஜெயம் ரவி நடித்து வரும் அடங்க மறு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி பெரிய வரவேற்பைப் பெற்று வருகிறது.

இதில் ஜெயம் ரவி பொலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். இவருக்கு ஜோடியாக ராஷி கண்ணா நடித்திருக்கிறார். இவர்களைத் தவிர படத்தில் நடிக்கும் வேறு நடிகர்கள் மற்றும் நடிகைகளைப் பற்றிய தகவல்களை படத் தயாரிப்பு நிறுவனம் ரகசியமாக வைத்திருக்கிறது.

படத்திற்கு சாம் சி எஸ் இசையமைக்கிறார். எஸ் கே செல்வகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் அறிமுக இயக்குநர் கார்த்திக் தங்கவேல்.

இப்படத்தின் டீஸர் மற்றும் சிங்கிள் ட்ராக் விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.