(இரோஷா வேலு) 

பொரளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின்போது ஹேரோயின் போதைப் பொருளுடன் மூவரை கைதுசெய்துள்ளதாக பொரளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அந்த வகையில் நேற்று பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலுக்கிணங்க சுற்றிவளைப்பினை மேற்கொண்ட பொலிஸார், 67.110 மில்லிகிராம் ஹேரோயினுடன் மூன்று இளைஞர்களையும் கைதுசெய்துள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட மூவரையும் இன்று மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.