அரி­சியை விட மிகச்சிறிய கணினி: மிச்­சிகன் பல்­க­லைக்­க­ழகம் சாதனை

Published By: J.G.Stephan

25 Jun, 2018 | 03:45 PM
image

அமெ­ரிக்­கா­வி­லுள்ள மிச்­சிகன் பல்­க­லைக்­க­ழக ஆராய்ச்­சி­யா­ளர்கள் நீண்ட கால­மாக சிறியள­வி­லான கணி­னியை உரு­வாக்கும் முயற்­சியில் ஈடு­பட்டு வந்­தனர். அவர்­களின் முயற்­சிக்கு தற்­போது வெற்றி கிடைத்­துள்­ளது. 0.3 மி.மீற்றர் நீள­முள்ள இந்த கணி­னியை அவர்கள் உரு­வாக்கி சாதனை படைத்­துள்­ளனர்.

அதா­வது ஒரு அரி­சியின் பருமனைவிட சிறியளவில் இந்த கணினி அமைந்­துள்­ளது என்று ஜின்­ஹுவா செய்தி நிறு­வனம் தெரிவித்துள்­ளது.

இதற்கு முன்பு ஐ.பி.எம். நிறு­வனம் கடந்த மார்ச் மாதத்தில் 1 மில்­லி­மீற்றர் நீள­முள்ள சிறிய கணி­னியை தயா­ரித்­தி­ருந்­தது. தற்­போது அதைவிட 0.3 மில்­லி­மீற்றர் நீளத்தில் இந்த கணினியை மிச்­சிகன் பல்­க­லைக்­க­ழக ஆராய்ச்­சி­யா­ளர்கள் உரு­வாக்­கி­யுள்­ளனர்.

இது­கு­றித்து மிச்­சிகன் பல்­க­லைக்­க­ழக தொழில்­நுட்பம் மற்றும் கணினி பொறி­யியல் பிரிவு பேரா­சி­ரியர் டேவிட் பிளாவ் கூறும்­போது, “சிறப்­பான முறையில் இந்த கணி­னியை உரு­வாக்­கி­யுள்ளோம். அதை கணி­னிகள் என்று அழைக்­க­லாமா அல்­லது வேண்­டாமா என்­பது இன்னும் தீர்­மா­னிக்­கப்­ப­ட­வில்லை.

அந்த அளவுக்கு சிறப்பான முறையில் கணினி உருவாகியுள்ளதாக பலரும் தெரிவிக்கின்றனர். கணினியின் ரெம், போட்டோவோல்ட்டெய்க், புரசசர்கள், வயர்லெஸ் டிரான்ஸ்மிட்டர்கள், ரிசீவர்கள் என அனைத்தும் சிறந்த முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளன” என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மனித உரிமைகளை வலுப்படுத்த விரும்பும் இளைஞர்களின்...

2024-03-18 16:04:18
news-image

சமாதானத்தை ஜனநாயகத்தை வலுப்படுத்துவதில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தினையும்...

2024-03-18 11:46:14
news-image

செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தும்போது ஒழுக்கவியல் சார்ந்த...

2024-03-15 15:43:14
news-image

டிக்டொக்கை பின்னுக்குத் தள்ளிய இன்ஸ்டாகிராம்

2024-03-11 10:13:06
news-image

மனித மூளையில் ‘சிப்’ ; எலான்...

2024-01-30 13:16:57
news-image

“மூன் ஸ்னைப்பர்” வெற்றிகரமாக தரையிறங்கியது :...

2024-01-19 21:59:46
news-image

எதிர்காலத்தை ஆளப்போகும் செயற்கைநுண்ணறிவு

2023-11-22 15:47:57
news-image

வட்ஸ் அப்பில் ஒரே நேரத்தில் இரண்டு...

2023-10-21 12:02:07
news-image

ஸ்னாப் செட்டின் புதிய செயற்கை நுண்ணறிவு...

2023-10-07 11:02:07
news-image

கூகுளுக்கு இன்று வயது 25

2023-09-27 10:36:57
news-image

ஏகத்துவத்தை நோக்கி தொழில்நுட்பத்தில் வேகமாக மாற்றமுறும் ...

2023-09-22 18:33:26
news-image

சமூக வழிகாட்டுதல்கள் பற்றிய விழிப்புணர்வை இலங்கையில்...

2023-08-28 20:48:26