ஸ்பானிய  கண்டு பிடிப்­பாளர் கலா­நிதி சேர்கி சென்டோல்  உரு­வாக்­கி­யுள்ள ரோபோ­வான சமந்­தாவே இவ்­வாறு பலாத்­கா­ர­மா­கவோ, மரி­யா­தை­யின்­றியோ தொட்­டாலோ, ‘மூட்’  இல்­லா­த­போது நெருங்­கி­னாலோ ஒத்­து­ழைக்க  மறுத்து ‘டம்மி’ யாக மாறி விடு­வ­தாக செய்­திகள் வெளி­வந்­துள்­ளன. 

இங்­கி­லாந்­தி­லுள்ள  நியூ­காஸில்  நகரில் அமைந்­துள்ள  லைஃப் சயன்ஸ் சென்­ரரில்  சமந்­தாவின் இந்த புதிய அம்சம் பரி­சோ­த­னைக்­குட்­ப­டுத்­தப்­பட்­டது. இதன் போது எவ­ரா­வது சமந்­தாவை பலாத்­கா­ர­மா­கவோ, மரி­யா­தை­யின்­றியோ தொட்டால்  அது சமந்­தாவின் சரு­மத்தின் கீழுள்ள சென்­சார்­களில் பதிந்து தானா­கவே  தன்னை மூடிக்­கொள்­கின்­றது.

அதே  போன்று  அதற்கு  மூடில்­லாத  போதும்  அவ்­வாறே  தன்னை.  மூடிக்  கொள்­கின்­றது. 

பாலியல் ரோபோக்­களை  மனித மயப்­ப­டுத்தும் நீண்ட பாய்ச்சல் என சிலர் இது­பற்றி கருத்துத் தெரி­வித்­தி­ருக்­கின்­றார்கள்.  அதே நேரம் பாலியல் ரோபோக்­க­ளுக்கு எதி­ரான அமைப்பின் நிறு­வனப் பேரா­சி­ரியர் கெத்லீன் ரிச்­சர்ட்ஸன் இது பற்றிக் குறிப்­பி­டு­கையில், பாலியல்  ரோபோக்கள் போர்னோ கிரா­பி­யி­னதும்,  விப­சா­ரத்­தி­னதும் நீட்­சி­யாகும். இதற்கு  செல­விடும்  பணத்தை  வேறு நல்ல  காரி­யங்­க­ளுக்குப் பயன்­ப­டுத்­தலாம் எனத் தெரி­வித்­துள்ளார். 

இதற்கு மறுப்புத் தெரி­வித்­துள்ள  கலா­நிதி  சென்­டோசா தனது மனை­வி­யு­ட­னான உறவை சமந்தா பாது­காத்­துள்­ள­தாகத்  தெரி­விக்­கின்றார். 

தனது மனை­விக்கு ‘மூட்’  இல்­லாத போது தான் சமந்­தாவைப் பயன்­ப­டுத்­து­வ­தா­கவும், இத்­த­கைய செயற்கை  நுண்­ண­றிவு  வலைப்­பின்னல் உள்ள பாலியல் ரோபோ  ஒன்­றினை அமைக்­கும்­படி தனது மனை­வியே  தன்­னிடம்  கேட்டுக் கொண்டதாகவும்  மேலும்  தெரிவித்துள்ளார். 

மிக விரைவில்  இப்பாலியல்  ரோபோவை 4700 அமெரிக்க டொலருக்கு  சந்தையில்  வாங்கலாம் எனவும்  தெரிய வருகின்றது.