முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான் என அழைக்கப்படும் சிவனேசத்துரை சந்திரகாந்தனை 14 நாட்கள் எதிர்வரும் மார்ச் மாதம் 18ம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு இன்று  மட்டக்களப்பு உயர்நீதிமன்ற நீதிபதி சந்திரமணி சிவபாதம் உத்தரவிட்டார்.

கடந்த 3 மாதங்களாக மட்டக்களப்புடி நீதவான் நீதிமன்றத்தினால் பிள்ளையான் விசாரணை செய்யப்பட்டு வந்த நிலையில் இன்று முதன்முறையாக உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டார்.

கடந்த 2005.12.25ம் திகதி மட்டக்களப்பு மரியாள் தேவாலயத்தில் நத்தார் ஆராதனையில் கலந்து கொண்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை தொடர்பாக கடந்த 09.10.2015 அன்று கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டு தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டுவந்தமை  குறிப்பிடத்தக்கது.

- ஜவ்பர்கான்