அமெரிக்காவில் அமைந்துள்ள வத்திக்கான் தூதரகத்தின் தலைமை தூதுவருக்கு ஆபாசப்படம் பார்த்தமைக்காக ஐந்து ஆண்டு சிறை வித்க்கப்பட்டுள்ளது.

அமெரிக்க தலைநகர் வொஷிங்டனில் அமைந்துள்ள வத்திக்கான் தூதரகத்தின் தலைமை தூதுவராக பணியாற்றிய மோன்சைனோர் கார்லோ ஆல்பெர்டோ கபெல்லா மீது கடந்த ஆண்டு பாலியல் ரீதியான பல குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இந்ந்நிலையில் தடை செய்யப்பட்ட குழந்தைகள் பாலியல் படங்களை அவர் பார்த்து வந்ததாகவும் தெரியவந்துள்ளது. இதைதொடர்ந்து அவர் தூதுவர் பணியில் இருந்து பதவி நீக்கம் செய்யப்பட்டு வத்திக்கானுக்கு திருப்பி அனுப்பப்பட்டார். அவர்மீது வத்திக்கான் அரண்மனையில் விசாரணை நடைபெற்று வந்தது.

மன அழுத்தத்தின் காரணமாக இதைப்போன்ற படங்களை பார்ப்பதை பழகிகொண்டதாக வாக்குமூலம் அளித்த மோன்சைனோர் தனது குற்றத்தை ஒப்புகொண்டார். இதை தொடர்ந்து அவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 5 ஆயிரம் யூரோ அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

இத்தாலி நாட்டை சேர்ந்த மோன்சைனோர் கார்லோ ஆல்பெர்டோ கபெல்லா தனது தண்டனையை வத்திக்கான் அரண்மனை வளாகத்தில் உள்ள சிறைச்சாலையில் அனுபவிக்க நேரிடும் என தெரியவந்துள்ள நிலையில், மேலும் இதுபோல் சுமார் 30 அதிகாரிகள் வாட்டிகன் நீதிமன்றத்தில் பாலியல் ரீதியான வழக்குகளை சந்தித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.