(எம்.மனோசித்ரா)

எமது போராட்டத்துக்கு மேலும் வலுச்சேர்க்கும் வகையில் வங்கிகள், கல்வி திணைக்களங்கள், புகையிரத திணைக்களம், துறைமுகம் போன்ற பல்வேறு அரச நிறுவனங்களும் எம்முடன் கைகோர்க்கவுள்ளனர் என தபால் ஊழியர் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சிந்தகபண்டார தெரிவித்தார்.

அவர் இது தொடர்பில் மேலும் குறிப்பிடுகையில், 

இரண்டாவது வாரமாகவும் நாம் போராட்டத்தை தொடர்கின்றோம். எனினும் அரசாங்கமோ தபால் சேவைகள் அமைச்சோ இது தொடர்பில் எந்த தீர்வினையும் வழங்குவதாக இல்லை. எமது போராட்டத்தை மேலும் பலப்படுத்தி அரசாங்கத்திற்கு அழுத்தத்தை கொடுப்பதற்காக வங்கிகள், கல்வி திணைக்களங்கள், புகையிரத திணைக்களம், துறைமுகம் போன்ற பல்வேறு அரசசார் நிறுவனங்கள் எமது தொடர்ச்சியான போராட்டத்திற்கு உதவுவதாக தெரிவித்துள்ளன. 

மேலும் மல்வத்து, அஸ்கிரிய மாநாயக்க தேரர்களையும் சந்தித்து நாம் கலந்துரையாடியுள்ளோம். அவர்களும் அரசாங்கத்தின் மீது அதிருப்தியிலேயே உள்ளனர் என்றார்.