இலங்கையில் 35 வருட பூர்த்தியை கொண்டாடும் DHL Express

20 Nov, 2015 | 12:13 PM
image

உலகின் முன்னணி சர்வதேச அதிவேக சேவை வழங்குநரான DHL Express நிறுவனம் இலங்கையில் 35 வருட பூர்த்தியினை இந்த வருடம் கொண்டாடுகின்றது.

நாட்டின் முன்னணி சரக்கியல் நிறுவனம் எனும் ரீதியில் கடந்த 1980 ஆம் ஆண்டு இலங்கை சந்தையில் DHL Express தடம் பதித்தது. இன்று இந்நிறுவனம் குறிப்பிடத்தக்க சந்தைப் பங்கினை பதிவு செய்துள்ளதுடன், இலங்கையின் வெவ்வேறு தொழிற்துறைகளின் கப்பல் மற்றும் வர்த்தக தேவைகளை பூர்த்தி செய்து வருகிறது.

மேலும் இந்த நிறுவனம் இலங்கையில் பணிபுரிவதற்கு மிகச்சிறந்த 20 நிறுவனங்களுள் ஒன்றாக தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. உள்நாட்டு சரக்கியல் துறையில் தொடர்ச்சியாக மாற்றங்களை ஏற்படுத்திய இந்த நிறுவனம் கடந்த 2007ஆம் ஆண்டில் அலுவலக கட்டிடத்தை அங்குரார்ப்பணம் செய்திருந்ததுடன், அதே ஆண்டில் நாட்டின் சர்வதேச விமான நிலையத்தில் air cargo விற்கான நுழைவாயில் வசதியை அமைத்திருந்தது.

US மற்றும் UK சந்தைகளுக்கு அடுத்தநாளே பொருட்களை விநியோகிப்பதற்கான ஆதரவை வழங்குகின்ற அர்ப்பணிக்கப்பட்ட ஒரேயொரு சுங்க கிடங்கு, 24 மணிநேர சுங்க அனுமதியுடனான வான்வழி வசதி மற்றும் 24 மணித்தியால வாடிக்கையாளர் சேவை என்பவற்றை இலங்கையிலுள்ள DHL நிறுவனம் வழங்கி வருகின்றது.

“DHL Express ஸ்ரீலங்கா நிறுவனம் 35ஆவது வருட பூர்த்தியை கொண்டாடுவதையிட்டு நாம் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். எமது வாடிக்கையாளர்கள் மற்றும் அவர்களது வணிகத் தேவைகள் தொடர்பிலான ஆழமான புரிதலே எமது ஒட்டுமொத்த வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

எமது வாடிக்கையாளருக்கு சிறந்த சேவையை வழங்குவதில் எமது ஊழியர்கள் முக்கிய பங்காற்றியதுடன், கடந்த பல ஆண்டுகளாக அவர்களது அர்ப்பணிப்பு மற்றும் உடன்பாடு உண்மையாகவே பாராட்டத்தக்கதும், விலைமதிக்க முடியாதவையாகவும் அமைந்துள்ளன” என DHL Express ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் பிரதம செயற்பாட்டு அதிகாரி ஜெரி ஷீ தெரிவித்தார்.

DHL Express ஸ்ரீலங்கா நிறுவனத்தின் வெற்றிக்கதை குறித்து DHL Express தென் கிழக்கு ஆசியா மற்றும் தெற்காசியாவிற்கான இன் சிரேஷ்ட உப தலைவர் யஷ்மின் ஹலடாட் கான் தெரிவித்ததாவது,

“கடந்த மூன்று தசாப்தங்களாக DHL Express ஸ்ரீலங்காவின் வெற்றிப் பயணத்தில் ஓர் அங்கமாக இருந்ததையிட்டு நாம் மகிழ்ச்சியடைகிறோம். எமது வாடிக்கையாளர்களுடன் நீண்டகால உறவினை பேணி வருவதுடன், எமது கூட்டாண்மை பொறுப்புணர்வு திட்டங்கள் ஊடாக இலங்கை சமூகத்திற்கு பயனளிக்கும் செயற்பாடுகளை தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்லவும் எம்மை அர்ப்பணித்துள்ளோம்” என்றார்.

DHL நிறுவனம் அதன் குழுமத்தின் GoGreen, GoTeach மற்றும் GoHelp முயற்சிகளின் கீழ் இலங்கையில் குறிப்பிடத்தக்க பல்வேறு திட்டங்களை வெற்றிகரமாக முன்னெடுத்து வருகிறது. DHL நிறுவனம் GoHelp திட்டத்தின் கீழ் இலங்கையில் அனர்த்த நிலைமைகள் ஏற்படும் சந்தர்ப்பங்களில் தொடர்ச்சியாக ஆதரவுகளை வழங்கி வருகிறது.

2004ஆம் ஆண்டு ஆழிபேரலை அனர்த்தத்தின் பின்னர் DHL நிறுவனம் அதன் அனர்த்த முகாமைத்துவ குழுவினர் ஊடாக நிவாரணப் பொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை வழங்கியிருந்தது. 

மேலும் 2014ஆம் ஆண்டில் DHL நிறுவனம் United Nations Development Programme (UNDP) உடன் இணைந்து DHL இன் வான் மற்றும் சரக்கியல் துறையின் பிரதான தேர்ச்சி மற்றும் நிபுணத்துவத்தை பயன்படுத்தி மோசமான சூழ்நிலைகளுக்கு தயார் நிலையில் இருக்கும் விதம் குறித்து விமான நிலையங்களுக்காக ‘பேரனர்த்தங்களுக்கு முகம் கொடுக்க தயார் நிலையில் இருத்தல்” (GARD) எனும் செயலமர்வு ஒன்றினை ஒழுங்கு செய்திருந்தது.

இந்த நிறுவனம் அதன் GoGreen திட்டத்தின் ஓர் அங்கமாக நடுநிலையான கார்பன் மற்றும் குறைவான கார்பன் ஷொப்பிங் தெரிவு போன்ற பல்வேறு தெரிவுகளை வாடிக்கையாளருக்கு வழங்கி இலங்கையில் நடுநிலையான கார்பன் போக்குவரத்து சேவையை அறிமுகம் செய்த முதலாவது சரக்கியல் வழங்குநராக DHL Express விளங்குகிறது.

உள்நாட்டு சமூகத்திற்கு சேவையாற்றல் மற்றும் ஊழியர்கள் மத்தியில் தொண்டாற்றும் மனப்பான்மையை ஊக்குவிக்கும் உலகளாவிய இயக்கியாக வருடாந்த சர்வதேச தன்னார்வ தொண்டர் தினத்தில் தொடர்ச்சியாக ஸ்ரீலங்கா நிறுவனத்தின் ஊழியர்கள் தமது நேரம் மற்றும் முயற்சியை செலவழித்து வருகின்றனர்.

குழந்தைகள் காப்பகங்களுக்கு தேவையான உதவிகள் மற்றும் இலங்கையில் பின்தங்கிய சமூகங்களுக்கு ஆதரவளிக்கும் வகையிலான நிதி திரட்டும் செயற்பாடுகள் போன்றன இத்திட்டங்களின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எளிமையான ஆரம்பத்துடன் தொடங்கப்பட்ட இந்த நிறுவனத்தின் தற்போதைய வளர்ச்சி குறித்து நோக்குகையில், 

DHL Express ஸ்ரீலங்கா நிறுவனம் புத்தாக்கம், இணையற்ற வாடிக்கையாளர் சேவை மற்றும் மிகச்சிறந்த சரக்கியல் தீர்வுகள் ஊடாக அதன் வளர்ச்சியை எட்டியுள்ளது. “இலங்கையின் மிக நீண்டகாலமாக நிலைத்திருக்கும் அதிவேக சரக்கியல் நிறுவனம் எனும் ரீதியில் நாம் தொடர்ச்சியாக எமது வாடிக்கையாளர்களுக்கு அதியுயர் தரத்திலான சேவைகள் வழங்குவதில் கவனம் செலுத்தி வருகிறோம். எமது வாடிக்கையாளர்களின் பிரத்தியேக தேவைகளை நாம் பூர்த்தி செய்து வருவதுடன், முன்னணி சரக்கியல் வழங்குநரர் தெரிவாக எமது நன்மதிப்பை பேணி வருகிறோம்” என DHL Express ஸ்ரீலங்கா நிறுவனத்தின் இலங்கை செயற்பாடுகளுக்கான தலைமை அதிகாரி திமித்ரி பெரேரா தெரிவித்தார்.

“கடந்த 1980 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட DHL Express ஸ்ரீலங்கா நிறுவனம் 1992 ஆம் ஆண்டில் புளு சிப் பெருநிறுவனமான ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனத்துடன் இணைந்து துரிதமான வளர்ச்சியை அடைந்துள்ளது.  DHL Express ஸ்ரீலங்கா நிறுவனத்தின் சேவைகளுள், முதலீட்டுச் சபை ஊடாக இறக்குமதி கப்பல் போக்குவரத்து முன் அனுமதி, தொந்தரவு அற்ற கப்பல் போக்குவரத்துக் காப்பீடு, தரக் கட்டுப்பாடு நிலையத்தின் (QCC) ஊடாக பன்முக பொருட்களை எடுத்தல் மற்றும் விநியோகம், 24 மணிநேர கப்பல் போக்குவரத்து கண்காணிப்பு போன்றன உள்ளடங்கியுள்ளன. 35 வருடகால பயணத்தை நாம் வெற்றிகரமாக கடந்துள்ளதுடன், இன்று இலங்கையின் சரக்கியல் சேவை வழங்குநர்கள் மத்தியில் மிகவும் மதிப்புமிக்க நிறுவனமாக DHL Express விளங்குகிறது. எமது சாதனைகள் குறித்து நாம் மகிழ்ச்சியடைவதுடன், எதிர்வரும் காலங்களிலும் இத்தேசத்திற்கு சேவையாற்ற எதிர்பார்த்துள்ளோம்” என பெரேரா தெரிவித்தார்.

"DHL நிறுவனம் சரக்கியல் சந்தையில் முன்னணி உலகளாவிய வர்த்தகநாமமாக திகழ்கிறது. DHL நிறுவனமானது சர்வதேச அதிவேக சேவை, வான்வழி மற்றும் கடல்மூல சரக்கு, வீதி மற்றும் ரயில் போக்குவரத்து, ஒப்பந்த அளவையில் மற்றும் சர்வதேச மின்னஞ்சல் போன்ற சேவைகளை தம் வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது.

இந்த சர்வதேச வலைப்பின்னலானது 220 நாடுகளுக்கும் மேலாகவும் விஸ்தரிக்கப்பட்டுள்ளதுடன் இதன் கீழ் 325,000 ஊழியர்கள் சர்வதேச சேவையில் ஈடுபட்டுள்ளனர். DHL நிறுவனமானது காலநிலை பாதுகாப்பு, அனர்த்த முகாமைத்துவம் மற்றும் கல்வி போன்றவற்றிற்காக பாரிய சமூக பொறுப்புணர்வு திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. 

DHL நிறுவனமானது Deutsche Post DHL குழுமத்தின் ஓர் அங்கமாகும். இந்த நிறுவனம் 2014 ஆம் ஆண்டில் தேறிய இலாபமாக 56 பில்லியன் யூரோக்களை பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈவா அனுசரணையில் பொருளாதார ரீதியாக பின்தங்கிய...

2023-05-25 10:11:01
news-image

DIMO Healthcare எனும் நாமத்தின் கீழ்...

2023-05-25 09:56:13
news-image

நவநாகரிக ஆடை வடிவமைப்பு பட்டப்படிப்பை வழங்க...

2023-05-25 10:09:50
news-image

'People’s Remittance கோடி அதிர்ஷ்டம்’ ஆண்டிறுதி...

2023-05-24 14:55:31
news-image

விளம்பரத்துறையை புதுப்பிக்க 3R உத்தியை இயக்க...

2023-05-22 20:19:51
news-image

DSI அதன் AVI வர்த்தகநாமத்தின் மீறலுக்கு...

2023-05-22 13:33:00
news-image

AIA லங்காவின் பிரதம முகவர் நிறுவன...

2023-05-22 12:39:22
news-image

அமானா வங்கி 'LankaPay டெக்னோவேஷன் விருதுகள்...

2023-05-18 17:08:15
news-image

பிசினஸ் டுடேயின் சிறந்த 40 நிறுவனங்கள்...

2023-05-18 14:31:58
news-image

மக்கள் வங்கியின் யூனியன் பிளேஸ் கிளையானது...

2023-05-16 20:57:13
news-image

கடன் தள்ளுபடி குறித்த செய்திக்கு மக்கள்...

2023-05-16 21:25:27
news-image

இலங்கையில் பாதுகாப்பான சுகாதார பழக்கத்தை மேம்படுத்தும்...

2023-05-10 14:08:04