எனது சேவை தேவையா இல்லையா என்பதை மக்கள் தீர்மானிக்கட்டும்; உண்மைகளை வெளியிட்டார் விக்கி

Published By: Vishnu

25 Jun, 2018 | 09:36 AM
image

விதியின் கை எழுதி எழுதி மேற்­செல்லும் போது நடக்க வேண்­டி­யவை அந்­தந்த தரு­ணங்­களில் நடப்­பன என்­பது எனது நம்­பிக்கை. எப்­போதோ முடிந்த காரி­ய­மா­கத்தான் நான் இப்­போது உங்கள் முன் பேசு­கின்றேன். எனது ஆன்­மீகப் பின்­னணி அர­சி­ய­லுக்கு ஒவ்­வாது என்று பலர் கூறக் கேட்­டுள்ளேன். அதை நான் வேறு வித­மாகப் பார்க்­கின்றேன். ஆன்­மீகம் அற்ற அர­சியல் வெறும் வாணி­பமே என்­பது எனது கருத்து. ஆன்­மீகம் அற்ற அர­சியல் மக்­களைப் பிரிக்கும். ஆன்­மீ­கத்­து­ட­னான அர­சியல் மக்­களை ஒன்­றி­ணைக்கும். இன்று வாணிப அர­சி­ய­லுக்கு எதி­ரா­கவே மக்கள் போராட வேண்­டி­யுள்­ளது.

நான் எழுதி வாசித்தல் பற்றி எனது மாணவர் குறை­யாகக் கூறி­யி­ருந்தார் என்று கூறினேன். எழுதி வாசித்­த­லினால் ஏற்­படும் நன்­மைகள் பற்றி எனது பிறி­தொரு நூலில் நான் கூறி­யுள்ளேன். அதை மீண்டும் இங்கு கூறலாம் என்று நினைக்­கின்றேன்.

உணர்ச்சி மேலீட்டில் கூறத்­த­கா­த­ன­வற்றைக் கூட்­டங்­களில் கூறாது விடு­வ­தற்­காக எழுதி வாசித்தல் பொருத்­த­மா­ன­தாகும்.

பிற­மொ­ழிக்­க­லப்­பின்றிப் பேசு­வ­தற்­காக எழுதி வாசித்தல் பொருந்தும்.

எடுத்­துக்­கொள்­ளப்­பட்ட விடயம் பற்­றிய உரிய ஆய்­வுகள் முன்­னமே நடந்து, பேச­வேண்­டிய பொருள் பற்­றிய உள்­ள­டக்கம் எழுத்தில் ஏற்­க­னவே கைவசம் இருந்­ததால் கூட்­டங்­களின் போது மனம் அல்­ல­லின்றி ஆறு­த­லாக இருக்க உதவி புரிந்­தது. இது எமது வய­திற்குத் தேவை­யாக இருந்­தது.

பேச்சை நேரத்­துக்­கேற்­ற­வாறு கட்­டுப்­ப­டுத்த ஏது­வாக அமைந்­தது. எப்­பொ­ழுதும் நேர­கா­லத்­தினுள் என் பேச்சை முடிக்க இவ் வழி உதவி புரிந்­தது. வழ வழ வென்று நீண்ட நேரம் பேசிக்­கொண்டு போவதை இது தடுத்­தது.

ஏதா­வது ஒரு பேச்சு அன்­றுடன் அழிந்து போக­விட நான் விரும்­ப­வில்லை. அதா­வது சிந்­தித்து சிரத்­தை­யுடன் தயா­ரித்த பேச்­சுக்­களை சிதிலம் அடை­ய­விட நான் விரும்­ப­வில்லை. அதற்­கா­கவும் எழுதி வாசிப்­பது முறை­யான ஒரு நட­வ­டிக்­கை­யாக எனக்­குப்­பட்­டது.

நான் நீதி­மன்றச் சேவையில் சேர்ந்து சட்ட விரி­வு­ரை­யா­ள­ராகத் தொடர முடி­யாத காலத்­திலும் எப்­படி எனது முன்­னைய சட்­ட­வி­ரி­வு­ரை­களை மாணவ மாண­வியர் பிர­திகள் எடுத்துப் பாவித்­தார்­களோ அதே போல் நான் போனாலும் எனது பேச்­சுக்கள் யாரேனும் ஒரு­வ­ருக்கு உதவி செய்­யட்­டுமே என்ற எண்­ணத்தில் எழுதி வாசித்து வந்தேன். ஆனால் சென்ற 30, 35 வரு­டங்கள் தான் நான் அவ்­வாறு எழுதி வைத்து வாசித்து வந்­துள்ளேன். அதற்கு முன்­னை­யவை எழுந்­த­மா­ன­மாகப் பேசி­ய­வை­யே­யாகும். அவை இப்­போது மறைந்து போய்­விட்­டன. காத்­தி­ர­மான பேச்­சுக்கள் என்று அப்­போது கூறப்­பட்ட பல பேச்­சுக்கள் காற்­றோடு காற்­றாக கலந்து போய் விட்­டன.

சிங்­கள மக்­களின் சரித்­திரம் பல விதங்­களில் கற்­களில், பாறை­களில் பிர­தி­ப­லிக்­கின்­றன. தமி­ழரோ இங்கு கற்­பா­றைகள் இல்­லா­த­தாலோ என்­னவோ தமது எண்­ணங்­களை, வர­லா­று­களைப் பின் வரு­ப­வர்­க­ளுக்கு விட்டு வைத்துச் செல்லத் தவறி விட்­டார்கள். அன்­றைய நாண­யங்­க­ளிலும் ஒரு சில கல்­வெட்­டுக்­க­ளி­லுமே அவற்றை நாங்கள் காணக் கூடி­ய­தாக உள்­ளன. இதனால் இது­வரை எம்மைப் பற்­றிய தவ­றான வர­லாறு தெற்­கத்­தை­யர்­களால் தெரி­யப்­ப­டுத்தி வரப்­பட்­டது. அண்­மைய அகழ்­வா­ராய்ச்­சிகள் தான் உண்­மையைப் புலப்­ப­டுத்­தி­யுள்­ளன. வர­லா­று­க­ளுக்கு கல்­வெட்­டுக்­களில் எழு­தப்­பட்­டவை எவ்­வ­ளவு முக்­கி­யமோ எமது பேச்­சுக்­களை எழுதி வைப்­பதும் அவ்­வா­றான நன்மை பயப்­பன என்று கொள்­ளலாம். எமது அன்­றைய கால சிந்­த­னை­களின் பிர­தி­ப­லிப்­புக்­க­ளாக அவை பரி­ணாமம் பெறக் கூடும் என்­பதே அதன் காரணம்.

ஆகவே எழு­தி­வைத்து வாசிப்­பது பல நன்­மை­களைத் தந்து வந்­துள்­ளது. “செய்­வன திருந்தச் செய்” என்ற கூற்­றுப்­படி என் பேச்­சு­களில் வரும் சகல எழுத்து, பொருள், தட்­டெ­ழுத்துப் பிழை­க­ளையும், குறி­யீ­டு­க­ளையும் அப்­போ­தைக்­கப்­போதே திருத்தி இறுதிப் பேச்சின் பிர­தியை எடுத்து வைத்துப் பேசி­யதால் என் பேச்­சுக்கள் அச்­சேற்­றப்­படும் போது இல­கு­வாக அச்­சே­றின.

இங்கு தான் என்­னு­டைய பிரத்­தி­யேக காரி­யா­லய அலு­வ­லர்கள், சிரேஷ்­டர்­களோ கனிஷ்­டர்­களோ, எனக்குப் பெரும் பணி­யாற்றி வந்­துள்­ளார்கள். அதி­கா­லையில் வந்து அல்­லது வெகு­நேரம் தாம­த­மாக மாலை வேளை­களில் இருந்து மனங் கோணாது, முகம் சுளிக்­காமல் எனக்கு உறு­து­ணையாய்ப் பணி­யாற்றி வந்­துள்­ளார்கள். இன்­றைய இந்த விழாவை ஒழுங்­க­மைக்க உத­விய அவர்கள் ஒவ்­வொ­ரு­வ­ரதும் பணி மகத்­தா­னது. எனது ஒவ்­வொரு பேச்சும் அவர்கள் கைவண்­ணத்தில் தட்­டெ­ழுத்தில் பதி­யப்­பட்­டவை.  

இன்­றைய பேச்­சாள நட்­சத்­தி­ரங்­க­ளுக்கு வருவோம். இன்று இந்த நிகழ்வில் பங்­கு­பற்றும் ஒவ்­வொ­ரு­வரும் எனது அன்­புக்கும் மதிப்­புக்கும் நன்­றிக்கும் பாத்­தி­ர­மா­ன­வர்கள். பேரா­சி­ரியர் சொர்­ண­ராஜா எனது பால்ய நண்பர். றோயல் கல்­லூ­ரியில் எனது சம­கா­லத்­தவர். பல வருட கால நட்பு. அவர் உலகின் பல பாகங்­க­ளிலும் உள்ள சட்டக் கல்­லூ­ரி­க­ளிலும் கலா­சா­லை­க­ளிலும் விரி­வு­ரைகள் ஆற்­றி­யவர். வெளி­நாட்டு முத­லீட்டுச் சட்­டத்தில் உலக நிபு­ணர்­களில் ஒரு­வ­ராக கணிக்­கப்­பட்­டுள்ளார். அவர் இன்று எமது அழைப்பை ஏற்று வரு­கை­தந்­தமை எம்மை கௌர­வப்­ப­டுத்தும் செய­லா­கவே நாங்கள் பார்க்­கின்றோம்.

எமது விசேட அதிதி   சம்­பந்தன்  காலம் தாழ்த்தி எம்­முடன் இணைய சம்­ம­தித்­தி­ருந்­தாலும் அவர் வரவு எமக்­கெல்லாம் பெரு­மை­யையும் மகிழ்­வையும் ஊட்டி உள்­ளது. என்னை இந்த முத­ல­மைச்சர் பத­விக்குக் கொண்டு வந்­தவர் அவரே. இது­வ­ரையில் அவ­ருக்கும் அவர் தலைமை வகிக்கும் கட்­சிக்கும் விசு்­வா­ச­மா­கவே நான் நடந்து வந்­துள்ளேன். கொடுத்த கையைக் கடிக்கும் பழக்கம் எனக்­கில்லை. ஆனால் உண்­மை­களை உள்­ள­படி வெளிக்­கொண்­டு­வ­ராது இருக்க முடி­யா­தவன் நான். அதனால் எனக்கும் கட்­சிக்கும் இடையில் விரி­சல்கள் ஏற்­பட்­டி­ருப்­பினும் என் நிலையைப் புரிந்து நட­வ­டிக்­கை­களில் இறங்­கி­வந்­தவர்   சம்­பந்தன் . ஆனால் கட்­சியில் சிலர் என்னை வெளி­யேற்றக் குறி­வைத்துக் கொண்­டுள்­ளார்கள். எனது சேவை தேவையா இல்­லையா என்­பதை மக்கள் தீர்­மா­னிக்­கட்டும்.

அர­சியல் ரீதி­யாக எமது எல்லாக் கட்­சி­களின் ஒற்­று­மை­யையே தமிழ் மக்கள் விரும்­பு­கின்­றார்கள். ஒற்­று­மை­யா­னது கொள்கை ரீதி­யி­லேயே அமைய வேண்டும். தம்பி பிர­பா­கரன்  தனது இயக்­கத்­திற்கு எதி­ராக நடந்து கொண்ட கட்­சிகள் பல­வற்­றைக்­கூட ஒன்று சேர்த்து ஒரு அர­சியல் கட்­சியை உரு­வாக்­கினார். அப்­போது கூட்­ட­மைப்­புக்குள் உள்­வாங்­கப்­பட்ட கட்­சிகள் சில இன்று வெளி­யிலே நிற்­கின்­றன. அது கொள்கை முரண்­பா­டுகள் கார­ண­மாக இருக்­கலாம். தனிப்­பட்ட கார­ணங்­க­ளுக்­கா­கவும் இருக்­கலாம். 

ஆனால் ஒரு ஏற்­கப்­பட்ட கொள்கைத் திட்­டத்தின் அடிப்­ப­டையில் பிரிந்­து­போன எல்லாக் கட்­சி­க­ளையும் சேர்த்து கூடிய வலு­வு­டைய ஒரு கட்­ட­மைப்பை உரு­வாக்­கு­வது காலத்தின் கட்­டா­ய­மாக அமை­கின்­றது. மத்­தியில் கூட்­டாட்சி மாகா­ணத்தில் தன்­னாட்சி என்று கூறி­விட்டு மத்­தியின் முக­வர்­க­ளாக நடந்து கொண்டு வந்­தி­ருப்­ப­வர்கள் எமது பய­ணத்­திற்கு இடை­யூறு விளை­விக்கக் கூடி­ய­வர்கள். அதே போல் தேசி­யக்­கட்­சி­களின் அங்­கத்­த­வர்கள் மத்­தியின் கட்­டுப்­பா­டு­க­ளுக்குக் கட்­டுப்­பட்­ட­வர்கள். அவர்கள் எமது உற­வு­க­ளாக இருந்­தாலும் எமது பய­ணத்தில் சேரக்­கூ­டி­ய­வர்கள் அல்ல.

சிலர் என்னைத் தீவிர போக்­கு­டை­யவர் என்று கூறு­கின்­றார்கள். அவர்­களை எமது கட்­சியின் தேர்தல் விஞ்­ஞா­ப­னங்­களை வாசிக்கக் கோரு­கின்றேன். சிலர் மக்­களின் வாக்­கெ­டுக்க அப்­ப­டித்தான் விஞ்­ஞா­ப­னங்­களில் போட­வேண்டும். 

ஆனால் நாங்கள் அர­சியல் செய்ய வேண்­டு­மென்றால் அவற்­றை­யெல்லாம் புறம்­தள்ளி வேலை­செய்ய வேண்டும் என்­கி­றார்கள். அவ்­வா­றா­ன­வர்கள் தான் என்னைத் தீவிர போக்­கு­டை­யவர் என்று கூறு­கின்­றார்கள். அவ்­வா­றான போக்கை நான் கண்­டிக்­கின்றேன். மக்­களை ஏமாற்றும் செயல்­களில் ஈடு­ப­டு­வது பாவம் என்­பதே எனது நிலைப்­பாடு. விஞ்­ஞா­ப­னங்­களில் கூறி­யி­ருப்­பதை அசட்டை செய்­வ­தாக இருந்தால் அவற்றை மாற்றி மக்­க­ளிடம் இருந்து பிறி­தொரு முறை அவர்கள் ஆத­ரவைப் பெறு­வது அவ­சியம்.

அண்­மையில் கட்சி நலன்சார்ந்து பல உடன்­ப­டிக்­கைகள் உள்­ளூ­ராட்சி மன்­றங்­களில் எட்­டப்­பட்­டன. கொள்கை ரீதி­யாக அவை நடை­பெ­ற­வில்லை. பதவி ஆசையே முக்­கிய குறிக்­கோ­ளாக இருந்­தது. விரைவில் இவ்­வா­றான கொள்கை அடிப்­படை தவிர்ந்த உடன்­பா­டுகள் சுய இலா­பங்­க­ளுக்­காக முரண்­பா­டு­களை வரு­விப்­பன என்று எதிர்­பார்க்­கலாம். விட்டுக் கொடுக்க வேண்டும் என்று கூறி எம்மை நாம் விற்கும் நிலைக்கு வந்­தாலும் ஆச்­ச­ரி­யப்­ப­டு­வ­தற்­கில்லை. ஆனால் சுய கௌர­வத்­து­ட­னான இணைந்த அர­சி­யலே மத்­தி­யிலும் மாகா­ணத்­திலும் கடைப்­ப­ிடிக்க வேண்­டி­யுள்­ளது. வெளியார் குடி­யேற்றம், பௌத்த விகா­ரைகள் 131 கட்­டப்­ப­டுதல் போன்ற எல்­லா­வற்­றிற்கும் சுய கௌர­வத்­து­ட­னான இணைந்த அர­சி­யலை நாம் நாடா­ததே காரணம்.

சில தினங்­க­ளுக்கு முன் கிழக்கு மாகா­ணத்தில் இருந்து வந்த தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பில் இது காறும் இருந்து வந்­த­வர்கள் இப்­பொ­ழுதும் இருந்து வரு­ப­வர்கள் கிழக்கு மாகா­ணத்தில் விட்­டுக்­கொ­டுத்­ததால் ஏற்­பட்ட கெடு­திகள் பற்றி எமக்­க­றி­வித்­தார்கள். நாம் வலு­வாக இருந்து கொண்டு மற்­ற­வர்­க­ளுக்கு விட்டுக் கொடுக்­கலாம். ஆனால் நாம் பலம் அற்ற நிலையில் இருந்து கொண்டு விட்­டுக்­கொ­டுப்­பது எம்மை நாமே அழித்துக் கொள்­வ­தற்குச் சம­மாகும் என்­றார்கள். கிழக்கு மாகா­ணத்தின் தற்­போ­தைய தமிழர் நிலை பரி­தா­ப­க­ர­மாக மாறி­யி­ருப்­பதை எடுத்­து­ரைத்­தார்கள். ஆகவே நாம் யாவரும் கூட்டுச் சேர வேண்டும்; ஒன்­று­பட வேண்டும் எனும் போது அது கொள்கை அடிப்­ப­டை­யி­லேயே நடை­பெ­ற­வேண்­டுமே ஒளிய கொள்­வோ­னுக்குக் கொத்­த­டி­மை­யாகும் விதத்தில் நடை­பெறக் கூடாது.

தமிழ் மக்­களின் அர­சியல் நிலை இன்று பரி­தா­ப­க­ர­மா­ன­தாக மாறி­யுள்­ளது, கட்சி ரீதி­யாக நாம் பிரிந்­துள்ளோம். ஆனால் எமது பல்­வேறு கட்­சி­களின் தேர்தல் விஞ்­ஞா­ப­னங்­களில் காணும் உள்­ள­டக்­கங்­களில் உள்ள முரண்­பா­டுகள் மிகச் சொற்­பமே. 2013 ஆம் ஆண்டு வெளி­வந்த எங்கள் கட்­சியின் தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தை அடிப்­ப­டை­யாக வைத்தே நான் எனது கருத்­துக்­களைத் தெரி­யப்­ப­டுத்தி வந்­துள்ளேன்.

அர­சியல் யாப்புப் பற்­றிய எமது வட­மா­கா­ண­ச­பையின் முன்­மொ­ழி­வு­களும் தமிழ் மக்கள் பேர­வையால் அர­சாங்­கத்­திற்குக் கைய­ளிக்­கப்­பட்ட முன்­மொ­ழி­வு­களும் அடிப்­ப­டையில் பலத்த முரண்­பா­டு­களைக் கொண்­டி­ருக்க வில்லை. அவை எமது 2013 ஆம் ஆண்டின் விஞ்­ஞா­ப­னத்தை அடிப்­ப­டை­யாகக் கொண்­ட­வையே. பின் எதற்­காக மாறிய கொள்­கைகள் உடை­ய­வர்­க­ளுடன் சேரு­கின்றோம், ஒரே கொள்­கை­யு­டை­யோ­ருடன் முரண்டு பிடிக்­கின்றோம்? இங்கு தான் தமிழ் மக்­களின் தனிப்­பட்ட மனோ­நிலை வெளி­யா­கின்­றது. அடிப்­ப­டையில் நாங்கள் ஆணைக்குக் கட்­டுப்­பட ஆயத்­தமாய் உள்ளோம். 

ஆனால் அய­ல­வர்­களை ஆத­ரித்து அர­வ­ணைத்து ஆண­வத்தை அடக்கி வைத்து பயணம் செய்ய முடி­யா­த­வர்­க­ளாக இருக்­கின்றோம். இது இங்கு மட்­டுமல்ல, வெளி­நா­டு­க­ளிலும் தமிழ் மக்­க­ளி­டையே காணும் ஒரு குணா­தி­சயம். தன்­னை­விட தன்­னி­னத்­தவன் எவனும் தகை­நி­லை­ய­டையக் கூடாது என்­பதில் கண்ணும் கருத்­து­மாக இருக்­கின்றோம். அதனால் மாண்பு மிக்க எமது இனம் சீர்­கு­லைந்து போவ­தையுஞ் சிறப்­பி­ழந்து போவ­தையும் நாம் காணக்­கூ­டி­ய­தாக இருக்­கின்­றது.

நாங்கள் ஒவ்­வொ­ரு­வரும் எங்கள் கல்வி, கலா­சாரம், சூழ்­நிலை, உடல்­நிலை, அனு­ப­வங்கள் போன்ற பல­வற்றின் ஊடா­கத்தான் வாழ்க்­கையைப் பார்க்­கின்றோம்.   போரினால் பாதிக்­கப்­பட்ட ஒரு­வரின் எண்­ணங்­களும் பார்­வை­களும் தம்மை அந்த நிலைக்கு உள்­ளாக்­கி­யவர் மேலேயே கோபமாய் மாறி­யி­ருக்கும். மிகக் குறைந்த கல்வி அறிவு பெற்ற ஒருவர் குறை­பா­டுள்ள தனது அறிவின் மூல­மா­கத்தான் உலகைப் பார்க்­கின்றார். உயர் சிந்­த­னை­களோ உய­ரிய கொள்­கை­களோ அவரை அதிகம் ஆட்­கொள்ள மாட்டா. ஆனால் அவ­ருக்கும் தமது கருத்­துக்­களை வெளிப்­ப­டுத்த உரி­மை­யுண்டு.

வன்­மு­றையில் ஈடு­பட்­ட­வர்கள் வன்­மு­றைதான் வள­மான ஆயுதம் வாழ்க்­கைக்கு, என்பார்கள். என் சிங்கள நண்பர் ஒருவர் பிரதி மந்திரியாக 1977ல் நியமிக்கப்பட்டார். அவரைப்பாராட்டிய பின்னர் “அதிகாரம் உன் கைக்கு வந்துவிட்டது. அடுத்து என்ன செய்யப்போகின்றாய்?” என்று கேட்டேன். உடனே அவர் தேர்தலுக்கு செலவழித்த பணம் யாவற்றையும் மீளப்பெறுவதே தனது இலட்சியம் என்றார். அப்பொழுதிருந்தே பதவியை வைத்து அவர் நன்றாக உழைத்தார். தேர்தல் செலவுகளுக்கும் மேலாகப் பணம் ஈட்டினார். பின்னர் அவர் ஜே.வி.பி. யினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அதே போல்த்தான் அரசியல் என்பது ஒரு வணிகம் என்ற நிலைப்பாட்டில் வளர்ந்த ஒருவர் அரசியலை வணிகமாகவே பார்ப்பார்;. தனக்கு அரசியலால் என்ன இலாபம் கிடை க்கும் என்றே அவர் பார்ப்பார். மக்கள் அவருக்கு ஒரு பொருட்டல்ல.

வெவ்வேறு மனோநிலைகள் கொண்ட இவர்கள் யாவரையும் ஒன்றிணைத்துச் செல்வது அவ்வளவு இலேசான காரிய மல்ல. ஆனாலும் இன்றைய எமது தமிழ் மக்களுக்கு ஒற்றுமை அவசியம். ஒருங் கிணைந்து செயற்படுவது அவசியம். உயரிய கொள்கைகளை உள்ளடக்கி அவற்றின் அடிப்படையில் சுயநலம் களைந்து முன்னே றுவதே இன்று தமிழ் மக்களுக்கிருக்கும் ஒரேயொரு அரசியல் பாதை என்று கூறி இங்கு வந்திருக்கும் ஒவ்வொரு வருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்து விடைபெற்றுக் கொள்கின்றேன்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மத்திய கிழக்கு புவிசார் அரசியலில் ஈரானின்...

2024-04-19 18:33:36
news-image

எல்லா காலத்துக்கும் மிகவும் முக்கியமான ஒரு...

2024-04-19 14:59:40
news-image

கச்சதீவை வைத்து அரசியல் செய்யாதீர்கள்

2024-04-19 14:37:29
news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13