(எம்.எம்.மின்ஹாஜ்)

மாகாண சபை தேர்தல் முறைமை தொடர்பாக ஏற்பட்டுள்ள சிக்கல் நிலைமை குறித்து ஆராயும் நோக்கில் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் அமைச்சர் பைஸர் முஸ்தபாவுக்குமிடையில் முக்கியமான சந்திப்பொன்று எதிர்வரும் புதன்கிழமை மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி அமைச்சில் நடைபெறவுள்ளது.

இதன்போது அரசியல் கட்சிகள் தமது நிலைப்பாடுகள‍ை அறிவிப்பதுடன் புதிய முறைமை தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டு இணக்கபாட்டுக்கு வருவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.