(இராஜதுரை ஹஷான்)

மாகாண சபை தேர்தலை நடத்தாமல் 2020 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலினை நடத்துவதே அரசாங்கத்தின் பிரதான நோக்கமாக காணப்படுகின்றது என பாராளுமன்ற உறுப்பினர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.

அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

மக்களின் ஜனநாயக உரிமையினை பாதுகாக்கும் நோக்கத்திலே  காலத்திற்கு காலம் தேர்தல்கள் நடத்தப்படுகின்றது. தேர்தல்கள் உரிய காலத்தில் இடம்பெறும் பட்சத்திலே அரசியல் மற்றும் சமூக பிரச்சினைகளுக்கு தீர்வு காணமுடியும். ஆனால் தேசிய அரசாங்கம் ஜனநாயக ரீதியில் தேர்தலை நடத்தாமல் ஜனநாயக கொள்கை தொடர்பில் குறிப்பிடுவது வேடிக்கையாகவே காணப்படுகின்றது.

அரசாங்கம் தேர்தல்களை எதிர்கொள்ள தயாராக இல்லை அதன் காரணமாகவே தேர்தலை பிற்போட்டு வருகின்றது. மாகாண சபை தேர்தலை நடத்தாமல் 2020 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலினை நடத்துவதே அரசாங்கத்தின் நோக்கமாக காணப்படுகின்றது. 

மாகாண சபை  தேர்தலினை இவ்வருடத்திற்குள் நடத்தினால் அரசாங்கம் பாரிய அரசியல் நெருக்கடிகளை எதிர் கொள்ள நேரிடும். ஆகவே அவற்றினை தடுக்கவே பொய்யான விடயங்களை குறிப்பிட்டு தேர்தலை பிற்போட்டு வருகின்றனர் என்றார்.