வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனின் உரைகள் அடங்கிய 'நீதியரசர் பேசுகிறார்' எனும் நூல் வெளியீட்டு விழா இன்று யாழ்ப்பணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் நீண்டகால இடைவெளிக்கு பின்னர் தமிழ்த் தேசிய அரசியலில் எதிரும் புதிருமாக இருந்த எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தனும் வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனும் கலந்துகொண்டதன் மூலம் இச் சந்திப்பானது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு முக்கியத்துவம் மிக்கதொன்றாகும். 

அத்துடன் மேற்படி நூல் வெளியீட்டு நிகழ்வுக்கு சிங்கப்பூர் பல்கலைக்கழக சட்டப் பேராசிரியர் முத்துக்குமராசுவாமி சொர்ணராஜா பிரதம விருந்தினராகவும், வைத்திய கலாநிதி லக்ஸ்மன் சிறப்பு விருந்தினராகவும் கலந்துகொண்டதுடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன், மாவை சேனாதிராஜா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.