நோர்வூட்  பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டன் மஸ்கெலியா பிரதான வீதியில் பஸ்ஸில் மோதுண்டு பெண்ணொருவர் ஸ்தலத்திலே பலியானதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர். 

நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்ட்ட கோர்த்தி பகுதியிலே இன்று மாலை 4 மணியளவில் விபத்து சம்பவித்துள்ளது.

ஹட்டனிலிருந்து மஸ்கெலியா நோக்கிச்சென்ற தனியார் பஸ்ஸொன்றில் முன்சில்லில் பாய்ந்த நிலையிலே இவ் விபத்து சம்பவித்துள்ளதாகவும் விபத்தில் புத்திசுவாதீனமுற்ற பெண்ணொருவரே இவ்வாறு பலியானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இனம் தெரியாத குறித்த பெண் கடந்த சில தினங்களாக வீதியில் புத்திசுவாதீனமுற்ற நிலையில் சுற்றித்திரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

சடலத்தை ஹட்டன் மாவட்ட நீதவான் பார்வையிட்டப்பின் சடலம் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டவுள்ளதாகவும் பஸ்ஸின் சாரதி கைது செய்யட்டுள்ளதுடன் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணை தொடர்வதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.