(எம்.சி.நஜிமுதீன்)

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தமது உறுப்பினர் ஒருவரையே ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்குவதற்கு தீர்மானித்துள்ளது. அந்த வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனைவை களமிறக்க முடிவெடுத்துள்ளோம் என ஸ்ரீலங்கா சுதந்திர முன்னணியின் செயலாளரும் அமைச்சருமான மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தமது உறுப்பினர் ஒருவரையே ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்குவதற்கு தீர்மானித்துள்ளது. அந்த வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனைவை களமிறக்க முடிவெடுத்துள்ளோம். ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு அவரே பொருத்தமானவர்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மேலும் பலமடையச் செய்யும் வேலைத்திட்டத்தை நாம் ஆரம்பித்துள்ளோம். அதனைப் படிப்படியாக் முன்னெடுத்து வருகிறோம். ஆகவே விரைவில் மீண்டும் கட்சியை பலமான நிலைக்கு கொண்டு வருவோம். 

ஆகவே அவருக்கு ஆதரவு வழங்கும் எந்தக் கட்சியும் எம்முடன் இணைந்து செயற்பட முடியும் என்றார்.