யாழ்.பல்கலைகழகத்தின் வவுனியா வளாகத்தில் மாணவர்கள் தலை முடியை முற்றாக வெட்டி மொட்டையடித்தமை தொடர்பாக யாழ்.மனித உரிமை ஆணைக்குழு அறிக்கை சமர்ப்பிக்க யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தரை கோரியுள்ளது. 

கடந்த 3 தினங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வவுனியாவ வளாகத்தின் கனிஸ்ட நிலை மாணவர்கள் தமது தலை முடிகயை முற்றாக வெட்டி மொட்டையடித்திருந்தனர். இது தொடர்பான தகவல்கள் இணையத்தளங்களில் வெளியாகியிருந்நன.

இந்நிலையிலேயே இச் சம்பவம் தொடர்பாக உடனடியாக அறிக்கை ஒன்றை தமக்கு சமர்ப்பிக்குமாறு கோரி யாழ். மனித உரிமை ஆணைக்குழுவின் பணிப்பாளர் கணகராஜினால் யாழ்.பல்கலைக்கழகத்தின் துணைவேந்தருக்கு கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.