அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் இளைய மகன் ஜூனியரின் மகளுக்கு டுவிட்டர் மூலம் ஒருவாரல் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

 டிரம்பின் இளைய மகன் டொனால்ட் டிரம்ப் ஜூனியர். இவருக்கு 4 வயதில் சோலி என்ற மகள் இருக்கிறாள். இந்த நிலையில் அவளுக்கு டுவிட்டரில் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. 

கனடாவின் தொலைக்காட்சி ஒன்றில் எழுத்தாளராக பணிபுரியும் பாட்டுசால்ட் என்பவர் குறித்த டுவிட்டர் பதிவை செய்துள்ளார்.. அதில் கொலை மிரட்டல் விடுக்கும் பாணியில் ‘சோலி’யையும் விட மாட்டோம் என குறிப்பிட்டிருந்தார். அவரது இக்கருத்து சமூக வலை தளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அதையடுத்து அதை டுவிட்டர் பக்கத்தில் இருந்து அவர் நீக்கிவிட்டார். ஆனாலும் சிலர் அதை படமாக பிடித்து தங்களது பக்கங்களில் பதிவிட்டனர். பிரபல நடிகர் ஜேம்ஸ்வுட் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பாட் டுசால்ட்க்கு பதிலடி கொடுத்தார்.

மேலும் இதை உளவுத்துறை கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார். அது சர்ச்சையானதைத் தொடர்ந்து பாட்டுசால்ட் மன்னிப்பு கோரியுள்ளார்..