ஐஸ்லாந்தை வெற்றிகொண்டது நைஜீரியா

Published By: Digital Desk 4

23 Jun, 2018 | 08:47 AM
image

ஐஸ்லாந்தை டி குழுவுக்கான உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டியில் 2 க்கு 0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றிகொண்ட நைஜீரியா, இரண்டாம் சுற்றுக்கு செல்வதற்கான வாய்ப்பை அதிகரித்துக்கொண்டுள்ளது.

வொல்வோக்ரட் விளையாட்டரங்கில் வெள்ளி இரவு நடைபெற்ற இந்தப் போட்டியின் முதலாவது பகுதியில் கோல் போடுவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்துவதில் நைஜீரியா பெரும் சிரமத்தை எதிர்கொண்டது. ஆனால், இரண்டாவது பகுதியில் அஹ்மத் மூசா போட்ட இரண்டு கோல்கள் நைஜீரியாவுக்கு பெரும் நம்பிக்கையைக் கொடுத்துள்ளது. அத்துடன் ஆர்ஜன்டீனாவுக்கு எதிராக எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள டி குழுவுக்கான கடைசி லீக் போட்டியை எதிர்கொள்வதற்கான நம்பிக்கையையும் நைஜீரியாவுக்கு ஏற்படுத்தியுள்ளது.

போட்டியின் 49ஆவது நிமிடத்தில் தனது எல்லையிலிருந்து பரிமாறப்பட்ட பந்தை வலதுபுறத்திலிருந்து உள்புறமாக நகர்த்திச் சென்ற விக்டர் மோசஸ் கோலை நோக்கி உயர்த்தி உதைத்தார். அதேவேளை ஐஸ்லாந்து கோல் எல்லையை நோக்கி ஓடிய அஹ்மத் மூஸா தனது வலது காலால் பந்தைக் கட்டுப்படுத்தி அதேகாலால் பந்தை உதைத்து கோலினுள் புகுத்தி நைஜீரியாவை முன்னிலையில் இட்டார்.

இதனைத் தொடர்ந்து நைஜீரிய கோல் எல்லையை ஆக்கிரமிக்க ஐஸ்லாந்து முயற்சித்த போதிலும் நைஜீரிய வீரர்கள் அவற்றைக் கட்டுப்படுத்தினர். 

இதேவேளை நைஜீரிய வீரர்களின் வேகத்துக்கும் தடுத்தாடலுக்கும் ஐஸ்லாந்து வீரர்களால் ஈடுகொடுக்க முடியாமல் இருந்தது.

போட்டியின் 79ஆவது நிமிடத்தில் இடதுபுறத்திலிருந்து பந்தை நகர்த்தியவாறு கார்ல் ஆர்னசனைக் கடந்து சென்ற அஹ்மத் மூஸா, எதிரணி கோல்காப்பாளருக்கு வித்தை காட்டி தனது இரண்டாவது கோலை போட்டார்.

இதன் மூலம் 1990இல் ரொஜர் மில்லாவுக்கு அடுத்ததாக உலகக் கிண்ணப் போட்டியில் இரண்டு கோல்களைப் போட்ட இரண்டாவது நைஜீரியரானார் மூஸா.

போட்டியின் 80ஆவது நிமிடத்தில் ஐஸ்லாந்து வீரர் பின்பொகாசனை நைஜீரிய வீரர் எபுயெஹி தனது பெனல்டி எல்லையில் வைத்து முரணான வகையில் வீழ்த்தினார். அதனை முதலில் பொருட்படுத்தாத மத்தியஸ்தர் பின்னர் வீடியோ உதவி மத்தியஸ்தரின் உதவியை நாடினார். 

சம்பவம் தொடர்பான காணொளியின் சலன அசைவுகளைப் பார்வையிட்ட மத்தியஸ்தர், மைதானத்துக்குள் வந்ததும் ஐஸ்லாந்துக்கு பெனல்டியை வழங்கினார். ஆனால் சிகர்ட்சன் படபடத்தவராக பந்தை கோல்காப்பின் குறுக்குக் கம்பத்துக்கு மேலாக உதைத்தார்.

அதன் பின்னர் நைஜீரியா தனது கோல் எண்ணிக்கையை அதிகரிக்க முயற்சித்தது. மறுமுனையில் கோல் போடுவற்கான ஓரிரு வாய்ப்புகளை ஐஸ்லாந்து ஏற்படுத்தியது. ஆனால் அவை ஒன்றும் பலிதமலிக்கவில்லை.

இப் போட்டி முடிவானது இரண்டு தடவைகள் உலக சம்பியனான ஆர்ஜன்டீனாவுக்கு பேரிடியைக் கொடுத்துள்ளது.

இப் போட்டி வேற்றிதோல்வியின்றி முடிவடைவதையே ஆர்ஜன்டீனா விரும்பியிருக்கும். ஆனால் நைஜீரியா வெற்றிபெற்றதால் அவ்வணிக்கு எதிராக செவ்வாயன்று நடைபெறவுள்ள போட்டியில் ஆர்ஜன்டீனா வெற்றிபெற்றே ஆகவெண்டிய கட்டாய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. 

(என்.வீ.ஏ.)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீராங்கனையை முத்தமிட்ட ஸ்பானிய கால்பந்து சம்மேளன...

2024-03-29 09:43:13
news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35