(எம்.எம்.மின்ஹாஜ், ஆர்.யசி)

பாராளுமன்றத்தின் புதிய நிலையியற் கட்டளையின் பிரகாரம் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையிலான அரசியலமைப்பு தொடர்பான புதிய குழுவுக்கு அமைச்சர் ரவூப் ஹக்கீம், பாராளுமன்ற உறுப்பினர்களான சமல் ராஜபக்ஷ மற்றும் விஜித்த ஹேரத் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதன்படி பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமையும் எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் பாராளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ஷவையும் பெயரிட்டுள்ளமை குறிப்பிடதக்கது