(நெவில் அன்தனி)

உலகக் கிண்ண கால்பந்தாட்டத்தில் ஈ குழுவில் இடம்பெறும் சேர்பியாவும், சுவிற்சர்லாந்தும் இரண்டாம் சுற்றுக்கான வாய்ப்பை குறிவைத்து காலினிங்க்ரட் விளையாட்டரங்கில் இன்று இரவு 11.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ள போட்டியில் விளையாடவுள்ளன.

ஐந்து தடவைகள் உலக சம்பியனானதும் தரப்படுத்தலில் இரண்டாம் இடத்திலிருப்பதுமான பலம்வாய்ந்த பிரேஸிலுடனான போட்டியை வெற்றிதோல்வியின்றி முடித்துக்கொண்ட சுவிட்சர்லாந்து, இன்றைய போட்டியில் சேர்பியாவுக்கு சிம்மசொப்பனமாக விளங்கும் என நம்பப்படுகின்றது.

இப் போட்டியில் சேர்பியா வெற்றிபெறும் பட்சத்தில் இரண்டாம் சுற்று வாய்ப்பை பெற்றுவிடும்.

எனவே இன்றைய போட்டியை சேர்பியா இலகுவில் விட்டுக்கொடுக்கப் போவதில்லை. இதன் காரணமாக இப் போட்டியில் இரண்டு சாராரும் கடுமையாக மோதிக்கொள்வது உறுதி.

சுவிற்சர்லாந்துடன் 13 போட்டிகளில் விளையாடியுள்ள சேர்பியா இரண்டு தடவைகள் மாத்திரமே தோல்வி அடைந்துள்ளது. இந்த வரலாற்றின் பிரகாரம் சேர்பியா இன்றைய போட்டியிலும் வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அணிகள் விபரம்

சேர்பியா: விலடிமர் ஸ்டொஜ்கோவிச், ப்ரனிஸ்லாவ் இவானோவிச், நிக்கோலா மிலென்கோவிச், டஸ்கோ டொசிக், அலெக்ஸாண்டர் கொலராவ், நெமஞ்ஞா மட்டிக், லூக்கா மிலிவோஜெவிச், செர்ஜெஜ் மிலின்கோவிச் சாலிவிச், டுசான் டெடிக், பிலிப் கொஸ்டிக், அலெக்ஸாண்டர் மிட்ரோவிச்.

சுவிட்சர்லாந்து: யான் சொமர், ஸ்டீவன் லிச்ஸ்டெய்னர், பேபியன் ஷோயர், மெனுவல் அக்கஞ்சி, ரிக்கார்டோ ரொட்றிகூஸ், வெலொன் பெஹ்ராமி, க்ரானிட் ஸாக்கா, ஸேர்டான் ஷக்கிரி, ப்லெரிம் டிஸிமய்லி, ஸ்டீவன் ஸூபர், ஹெரிஸ் செவரோவிக்.