(எம்.மனோசித்ரா)

வீரகொடிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முல்கிரிகல பிரதேசத்தில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி மற்றும் வெடிக்காத துப்பாக்கி ரவைகளுடன் ஒருவரை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் இவர் கைது செய்யப்பட்டுள்ளதோடு இவரிடமிருந்து எஸ்.எல்.ஆர் ரக துப்பாக்கி மற்றும் அதற்கு பயன்படுத்தும் 3 துப்பாக்கிரவைகளையும் கைப்பற்றியுள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் 25 வயதுடைய முல்கிரிகல பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.