பட்டிப்பொல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நுவரெலியா அம்பேவெல பிரதான வீதியில் அம்பேவெல மில்கோ நிறுவனத்திற்கு முன்னால் இடம்பெற்றஅ வாகன விபத்தில் இருவர் படுங்காயங்களுக்குள்ளாகியிருப்பதாக பட்டிப்பொல பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்து இன்று பகல் 1 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நுவரெலியாவிலிருந்து அம்பேவெல பகுதியை நோக்கி சென்ற லொறியும், அம்பேவெல பகுதியிலிருந்து நுவரெலியா பகுதியை நோக்கி சென்ற முச்சக்கரவண்டி ஒன்றுமே இவ்வாறு மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

முச்சக்கரவண்டியில் பயணித்த இருவர் படுங்காயங்களுக்குள்ளாகி நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணகளை பட்டிப்பொல போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.