(நெவில் அன்தனி)

பெண்களுக்கான 48 கிலோ கிராம் எடைப் பிரிவுக்கான பளுதூக்கல் ஸ்னெச் முறையில் மேல் மாகாண வீராங்கனை தினூஷா கோமஸ் புதிய தேசிய சாதனை நிலைநாட்டியுள்ளார்.

பொலன்னறுவை தேசிய விளையாட்டுத்தொகுதி உள்ளக அரங்கில் இன்று ஆரம்பமான 44 ஆவது தேசிய விளையாட்டு விழா பளுதூக்கல் போட்டியிலேயே விளையாட்டு விழா மற்றும் தேசிய சாதனையை தினூஷா கோமஸ் புதுப்பித்தார்.

இன்று நடைபெற்ற இப்போட்டியில் ஸ்னெச் முறையில் 71 கிலோ கிராம் எடையைத் தூக்கியதன் மூலம் தனது சொந்த தேசிய சாதனையான 70 கிலோ கிராம் எடையை தினூஷா கோமஸ் புதுப்பித்தார்.

இப் போட்டியில் ஜேர்க் முறையில் 87 கிலோ கிராம் எடையைத் தூக்கிய தினூஷா கோமஸ் மொத்தம் 158 கிலோ கிராம் எடையைத் தூக்கி தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்.

அவஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்டில் இவ் வருடம் நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டு விழாவில் ஸ்னெச் முறையில் 70 கிலோ கிராம் எடையை தூக்கியதன் மூலம்  தேசிய சாதனையைப் புதுப்பித்திருந்தார்.  அந்த சாதனையை இன்று அவர் முறியடித்து புதிய தேசிய சாதனையை நிலைநாட்டினார்.