(எம்.மனோசித்ரா)

இலங்கை அரசாங்கம் அசமந்தப் போக்குடன் செயற்படாது மனித உரிமைப் பேரவைக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற விரைவான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.

 

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையிலிருந்து அமெரிக்கா வெளியேறியுள்ளமையானது இலங்கைக்கு சாதக தன்மையை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியுள்ளமையானது அரசாங்கத்தின் பொறுப்பற்ற தன்மையை வெளிப்படுத்துகின்றது.

இந் நிலையில் அமெரிக்க மனித உரிமை பேரவையிலிருந்து விலகியிருந்தாலும் இலங்கைக்கு எதிராக முன்வைத்துள்ள பரிந்துரைகள் நீக்கப்பட மாட்டது. ஐ.நா. பேரவை அது தொடர்பில் தொடர்ந்தும் தமது செயற்பாடுகளை முன்னெடுக்கும்.

ஆகவே இலங்கை அரசாங்கம் அசமந்தப் போக்குடன் செயற்படாது மனித உரிமைப் பேரவைக்கு அளித்த வாக்குறுதிகளை விரைவாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.