சிம்­பாப்வே ஜனா­தி­பதி ரொபேர்ட் முகாபே 92 கிலோ­கிராம் நிறை­யு­டைய கேக்கை வெட்டி தனது 92 ஆவது பிறந்­த­நாளை ஞாயிற்­றுக்­கி­ழமை ஆடம்­ப­ர­மாகக் கொண்­டா­டினார்.

அவ­ரது பிறந்­த­நா­ளை­யொட்டி விசேட 16 பக்க அனு­பந்­தத்தை வெளி­யிட்ட அந்­நாட்டு அர­சாங்கப் பத்­தி­ரி­கை­யா­னது அவரை இயேசு கிறிஸ்­து­வுடன் ஒப்­பிட்டு விமர்­சித்­துள்­ளது. உலகின் மிகவும் வய­தான தலை­வ­ரான முகாபே கடந்த 36 வருட கால­மாக ஜனா­தி­ப­தி­யாக பதவி வகித்து வரு­கிறார். அவர் தனது பிறந்­த­நா­ளை­யொட்டி 550,000 ஸ்ரேலிங் பவுண் செலவில் பாரிய விருந்­து­ப­சா­ர­மொன்­றுக்கு ஏற்­பாடு செய்­தி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

சிம்­பாப்வே கடும் வரட்­சியால் பாதிக்­கப்­பட்­டதால் மில்­லி­யன்­க­ணக்­கான மக்கள் பட்­டி­னியால் வாடும் நிலைக்குத் தள்­ளப்­பட்­டுள்ள நிலையிலேயே ஜனாதிபதியின் இந்த பிறந்தநாள் கொண்டாட்டம் இடம்பெற்றுள்ளது.